மீண்டும் பொள்ளாச்சி… 16 வயது பள்ளிச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 9 பேர் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

girl attack image - 2026

பொள்ளாச்சியில் 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குமரன் பகுதியைச் சேர்ந்த 16 வயதே ஆன பள்ளிச் சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்பவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தச் சிறுமியின் மனத்தை மாற்றி, தாம் அவரைக் காதலிப்பதாகக் கூறி, தன் வலையில் சிக்க வைத்துள்ளார் அமானுல்லா. பின்னர் அந்தச் சிறுமியை தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார் அமானுல்லா.

அவருடன் சற்று நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரது நண்பர்கள் சிலர் திடீரென வீட்டுக்குள் புகுந்துள்ளனர். தொடர்ந்து, அந்தச் சிறுமையை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் நடந்தது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டி, தொடர்ந்து பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்தி வந்துள்ளார்.

அவர்களின் சித்ரவதையை தாங்க முடியாத பள்ளிச் சிறுமி, பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அமானுல்லா உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அமானுல்லா, பகவதி, முகம்மது அலி, டேவிட் செந்தில், முகமது ரபீக், அருண் நேரு, சையத் முகமது, இர்ஷாத் முகமது, இர்ஷாத் பாஷா ஆகியோரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக் காலமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் தொடர்ந்து கொடுக்கப் பட்டு வருவதும், அவை வெளிச்சத்துக்கு வருவதும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.