ஒரு தேசவிரோதி… எம்.பி., ஆவதா?! : ஹெச்.ராஜா காட்டம்!

Published:

hraja - 2026

சென்னை: தேச விரோத வழக்கில் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் எம்பி., ஆவது வெட்கக்கேடு என்று, பாஜக.,தேசியச் செயலர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

மதிமுக. பொதுச் செயலர் வைகோ, நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு திமுக., கூட்டணியின் சார்பில் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

வைகோ அவர்கள் தேசவிரோதி என்பது குற்றச்சாட்டோ, விமர்சனமோ அல்ல. நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவர் மாநிலங்களவை உறுப்பினரா? வெட்கம் .. என்று கருத்துப் பதிவு செய்துள்ளார்.

 

Related articles

Recent articles

spot_img