ஏழை வீட்டில் அமித் ஷா…! என்ன சாப்பிட்டார் தெரியுமா?!

amithsha hyd2 - 2026

தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாலையோரம் இருந்த வீட்டுக்கு சென்று தேநீர் குடித்து விட்டு, உரையாடிய நிகழ்வு அம்மாநிலத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இன்று ஹைதராபாத் வந்து சேர்ந்த அவர், பின்னர் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மாமிடிப் பள்ளி என்ற கிராமத்துக்குச் சென்றார். அங்கு பழங்குடியினப் பெண்ணான ஜாத்வதி சோனி என்பவரின் வீட்டில் உணவு உண்டு, தேநீர் அருந்தினார். அமித்ஷாவை காண ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர்.

தெலங்கானா மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா, ரங்காரெட்டியில் பாஜகவின் உறுப்பினர் இயக்கத்தை தொடங்கி வைத்தார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஹைதராபாத்திற்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இது.

தெலங்கானாவில், தற்போது 18 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 36 லட்சம் உறுப்பினர்களுக்கு குறிவைத்து, மெகா உறுப்பினர் இயக்கத்தை தொடங்கி உள்ளதாக அக்கட்சியின மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். அமித்ஷாவின் இந்த சுற்றுப்பயணம், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், வரும் 2023 தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் பாஜக அரசை அமைப்பதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பாஜக எம்எல்சி என்.ராம்சந்தர் ராவ் கூறியுள்ளார்.

amithsha hyd - 2026ஏழைப் பெண்மணியின் வீட்டில் அமித்ஷா உணவு உண்டது குறித்து செய்திகள் வைரலாகின. அங்கே அமித் ஷா என்ன சாப்பிட்டார் என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்டினர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஒரு நாள் பயணமாக தெலங்கானாவுக்கு வந்த பாஜக., தலைவர் அமித்ஷா ஒரு ஹரிஜனப் பெண்ணின் வீட்டில் மதிய உணவு உண்டார். அவருக்கு உப்புமா, பருப்பு, சோள மாவு சப்பாத்தி ஆகியவற்றை அந்தப் பெண்மணி கொடுத்தார்.

தெலங்கானா பயணத்தில் அமித்ஷா ஹைதராபாத் ‘பஹாடி பரிஷ் ‘ என்ற இடத்தில் உள்ள ‘ரங்கநாயகுல தண்டா’ என்ற பகுதியில் வசிக்கும் ‘சோனீ பாயி ‘என்பவர் வீட்டில் உப்புமாவோடும் பருப்போடும் சோள ரொட்டியை ருசித்து உண்டார். பின் தேனீர் அருந்தினார். பின்னர் அப்பெண்மணிக்கு கட்சி உறுப்பினர் படிவத்தை அளித்து பாஜக., உறுப்பினர் பதிவு நிகழ்ச்சிக்கு தெலங்கானாவில் இருந்து பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தார்.

சனிக்கிழமை இன்று மதியம் பிரத்யேக விமானத்தில் ஷம்ஷாபாத் விமான நிலையத்துக்கு வந்த அமித்ஷா அங்கிருந்து நேராக சோனீபாயி வீட்டிற்குச் சென்றார். தன் வீட்டிற்கு வந்த பாஜக., தலைவரிடம் தன் குறைகளை விவரித்த சோனீபாயி ஒரு விண்ணப்பத்தை அளித்தார். அமிர்தா பயணத்திற்காக காவல்துறையினர் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

amithsha hyd1 - 2026தெலங்கானாவில் கட்சியை பலப்படுத்துவதே நோக்கமென்று அமித்ஷா ஹைதராபாதிலிருந்து கட்சி உறுப்பினர் பதிவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜக., இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

வாராணசியில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பாஜக.,வில் அண்மைக் காலமாக சுறுசுறுப்பாக பணிபுரிந்து வரும் சோனீபாயி என்ற பெண்மணியை பாஜக., உறுப்பினர் பதிவு நிகழ்ச்சிக்கு முதல் காரியகர்த்தராக தேர்ந்தெடுத்தார்கள். தெலங்கானாவில் உறுப்பினர் பதிவு நிகழ்ச்சியை அவருடைய வீட்டில் இருந்து தொடங்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அமித்ஷாவோடு கட்சியின் மாநில தலைவர் லக்ஷ்மன், முரளிதர ராவ் மற்றும் பல தலைவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories