அத்துமீறி தொட்டா ஆள காட்டிக்கொடுக்கும் ! ஷாக் வேற அடிக்கும் ! அழகிற்காக அல்ல ஆபத்து காக்கும் வளையல் !

அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் சுய முன்னேற்றம் தொழில்நுட்பம்

bancle - 2026தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியில் சாய் தேஜா மற்றும் காடி ஹரிஷ் ஆகிய 2 இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெண்களை ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்காக ஸ்மார்ட் வளையல் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது பெண்களிடம் யாரேனும் அத்துமீறி நடந்துகொண்டால், அவர்களின் உடலில் அத்துமீறி தொட்டால், சீண்டிய நபருக்கு இந்த வளையல் ஒருவகை மின் அதிர்வை தரும். அதேசமயம் அந்தப் பெண் இருக்கும் இடம் அவருடைய பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்படும். இதன் மூலம் ஆபத்தான நிலையிலிருந்து பெண்கள் தங்களை காப்பாற்றி கொள்ள இயலும்.

இந்த கண்டுபிடிப்பானது பல பெண்களிடம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அனைத்து சோதனைகளிலும் இந்த வளையல் சரியான முறையிலேயே செயல்பட்டுள்ளது.

வெகுவிரைவிலேயே இந்த ஸ்மார்ட் வகைகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட் வலையளை அணிந்து  சோதித்த பெண்கள் நன்றாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இது கூறித்து ஸ்மார்ட் வளையலை உருவாக்கிய காடி கிரிஷ் கூறுகையில், ‘ஏற்கனவே மார்கெட்டில் உள்ள ஸ்மார்ட் வளையலை விட இது முற்றிலும் வித்தியாசமானது எனவும், சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது, இதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். எனவே இந்த ஸ்மார்ட் வளையலை உருவாக்கியுள்ளேன்’ என தெரிவித்தார்.

இந்த ஸ்மார்ட் வளையலை கண்டுபிடித்த 2 மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.