
மன்மோகன் ஆட்சியை விட மோடி ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறதா என்றால் ஆமாம் உயர்ந்திருக்கிறது என்று நாம் ஒப்புக்கொள்ள தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.. ஆனால்…
எவ்வளவு உயர்ந்திருக்கிறது? 2014 ல் சுமார் 9.5 ரூபாய் இருந்த excise duty இன்று சுமார் 32 ரூபாய். ஆனால் இதில் சுமார் 13 ரூபாய் மாநில அரசுக்கு போகிறது.. மொத்தம் 32 ரூபாய் வரை மாநில அரசுகள் சம்பாதிக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.. எப்படி பார்த்தாலும் கடந்த அரசை விட இந்த அரசு 12 முதல் 13 ரூபாய் அதிக வரி வசூலிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.. அதே சமயத்தில்..
இந்த அரசு அந்த பணத்தை எப்படி செலவு செய்கிறது என்று பார்க்க வேண்டும்.. UPA அரசாங்கத்தின் பொழுது மக்கள் நல திட்டங்களுக்காக செலவு செய்தது சுமார் 7 லட்சம் கோடி, இப்பொழுது 17 லட்சம் கோடி.. அன்று விவசாய துறைக்கான பட்ஜெட் 28000 கோடி, இன்று சுமார் 2.5 லட்சம் கோடி. அன்று பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் சுமார் 2 லட்சம் கோடி, இன்று 4.75 லட்சம் கோடி. UPA அரசாங்கத்தின் பொழுது fiscal deficit சுமார் 5 %. இன்று கொரோனா இல்லாமல் இருந்திருந்தால் அதை 3.5 % ஆகி இருக்கும் (கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக குறைத்து வந்தார்கள்).. UPA அரசாங்கத்தின் பொழுது தேசிய நெடுஞ்சாலைகள் ஒரு நாளைக்கு 12 km போடப்பட்டது.. இன்று சுமார் 22 km க்கு மேல் போடப்படுகிறது.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..
ஆகவே மோடி ஒன்றும் பணத்தை மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு போகவில்லை. 2014 ல் 72 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை இன்று 87 ரூபாய்.. 7 ஆண்டுகளில் சராசரியாக 2 ரூபாய் ஆண்டிற்கு என்று உயர்ந்து வருகிறது.. ஆனால் 2004 ல் 34 ரூபாய் இருந்த பெட்ரோல் விலையை 72 ரூபாய்க்கு கொண்டுவந்து விட்டது காங்கிரஸ்.. அதாவது ஆண்டுக்கு 3.8 ரூபாய் உயர்வு.. அதனால் மக்களை பெரிதாக பாதிக்காமல், அதே சமயத்தில் நாட்டின் வளர்ச்சிக்கான நிதி தேவைக்கு இதையும் ஒரு கருவியாக பயன்படுத்துகிறார் மோடி..
இவர்களுக்கெல்லாம் மோடியை திட்ட வேறு topic இல்லை. அதான் கடந்த 4-5 ஆண்டுகளாக இந்த பெட்ரோல் விலை உயர்வை பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள் என்பதுதான் உண்மை.
— Vij Sriram