இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Published:

ashwin-1
ashwin-1

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

சென்னை யில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

முதல் இன்னிங்சில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே 329 ரன்கள் மற்றும் 134 ரன்கள் எடுத்தன. 2வது இன்னிங்சில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே 286 ரன்கள் மற்றும் 164 ரன்கள் எடுத்தன.

2வது இன்னிங்சில் இந்திய அணியின் அக்சர் படேல் – 5, அஷ்வின் – 3, குல்தீப் யாதவ் – 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

முன்னதாக இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை மண்ணில் சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். சென்னை டெஸ்ட் போட்டி, கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத நினைவுகளைப் பெற்றுவிட்டது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

ALSO READ: செஞ்சுரி அடிச்சவரு அஸ்வின்… துள்ளிக் குதிச்சு சந்தோசப்பட்டவரு மொகமத் சிராஜ்… ஏன் தெரியுமா?!

இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டு, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்தது. இதை அடுத்து இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்று 1-1 என்ற நிலையில் உள்ளது.

Related articles

Recent articles

spot_img