பிரதமருக்கு ஒரு பெண் செய்த ட்விட்… ரயிலில் 20 லிட்டர் பால் அனுப்பிய பிரதமர் மோடி.
20 லிட்டர் ஒட்டகத்தின் பால் மும்பையில் இருக்கும் குடும்பத்திற்காக அனுப்பினார் மோடி.
மூன்றரை வயது குழந்தைக்கு பால் கிடைக்க வில்லை என்று நேராக மோடிக்கு அந்தப் பெண் ட்வீட் செய்ததால் ரயில்வே அதற்காக கிளம்பி வந்து உதவியது.
மூன்றரை வயது ஆண் குழந்தைக்கு பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் குடித்தால் அலர்ஜி வருவதாகவும் ஒட்டகத்தின் பால் வாங்கி எடுத்து வருவதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லை என்றும் அவர் அந்த ட்விட்டில் மோடியிடம் தெரிவித்திருந்தார்.
இதன்மீது ஐபிஎஸ் ஆபிஸர் அருண் போத்ரா சனிக்கிழமை அன்று ட்வீட் செய்தார்.
சனிக்கிழமை இரவு மும்பைக்கு ரயிலில் 20 லிட்டர் ஒட்டகத்தின் பால் அனுப்பியுள்ளோம். அந்த குடும்பத்தாரோடு கூட பிறருக்கும் அவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோருகிறோம். சிபி டீம் தருண் ஜைன், நார்த் வெஸ்ட் ரயில்வேக்கு நன்றி. கண்டைனரை எடுத்துச் செல்வதற்கு இந்த மாதிரி நேரத்திலும் அவர்கள் சம்மதித்தார்கள் என்று ட்விட் செய்துள்ளார்.
உண்மையில் அந்தப் பெண்மணி மோடிக்கு செய்த டிவிட்டில் என்ன கூறினார் என்றால்… சார், எங்களுக்கு மூன்றரை வயது மகன் இருக்கிறான். ஆட்டிஸம், உணவு ஒவ்வாமை நோயால் அவதிப்படுகிறான். அவன் வெறும் ஒட்டகத்தின் பால் மற்றும் சிறிது பருப்பு வகைகளால் மட்டுமே உயிரோடு இருக்கிறான். லாக்டௌன் ஆரம்பித்ததிலிருந்து சரியான பால் கிடைப்பதில்லை. ஒட்டகத்தின் பால் அல்லது ராஜஸ்தானில் உள்ள சதிரியில் கிடைக்கும் பால் பவுடர் அனுப்பி எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று ட்வீட் செய்தார்.