காய்ச்சல், சளியுடன் மூச்சுத் திணறல் இருந்தா கைக்குட்டையால் மூடிக்கிட்டு உடனே மருத்துவமனை போங்க!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
beela rajesh 1 - 2026

காய்ச்சல் சளியுடன் மூச்சுத்திணறல் இருந்தா நீங்களா மருந்து எடுத்துக்காதீங்க… உடனே மருத்துவமனைக்குப் போங்க… முகக்கவசம்லாம் வேணும்னு தாமதிக்காதீங்க… கைக்குட்டை, துப்பட்டா, அங்கவஸ்திரம் போன்றவற்றைக் கூட முககவசமா பயன்படுத்திக்கலாம் என சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா குறித்து தகவல்கள் தெரிவித்து வரும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது…

பொது மக்கள், அத்தியாவசிய பணிகளுக்கு, வெளியில் வரும்போது, மருத்துவமனைக்கு வெளியே, கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அது கிடைக்கா விட்டால், தங்கள் கைக்குட்டை, பெண்கள் தங்களின் துப் பட்டா, ஆண்கள் தங்களின் அங்கவஸ்திரம் ஆகியவற்றை கூட முக கவசமாக பயன்படுத்தலாம்.

குறிப்பாக, கைக்குட்டை, துப்பட்டா, அங்கவஸ்திரத்தை நன்றாக துவைத்து, கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம் செய்த பின் மட்டுமே முக கவசமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு காய்ச்சல் சளியுடன் மூச்சுத்திணறலும் இருந்தால், நீங்களாக மருத்துவம் பார்த்துக் கொள்ளாதீர்கள். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள். கைக்குட்டையை முகக்கவசமாக்கிக் கொண்டு செல்லுங்கள்… நீங்களாக மருந்து எடுத்துக் கொள்ளாதீர்கள். மருத்துவர் அறிவுரைப்படி நடந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.