ரோட்ல வண்டில போறீங்களா.?! உங்க வேலை அதோ கதிதான்!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல்
road - 2026

சாலை மீது வண்டிகளில் செல்கிறீர்களா…? உங்கள் வேலை அதோ கதிதான்…!

வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என்று கூறினால் யாருமே கண்டுகொள்வதில்லை. வண்டியில் அமர்ந்து சாலை மீது அலைந்து கொண்டே இருக்கிறார்கள். வழக்கு பதிவு செய்தாலும் கூட சாலை மீது அலைவதை மட்டும் யாரும் விடுவதில்லை.

இதனால் காரணமின்றி சாலை மீது வந்தால் இனி அபராதம், அடி கட்டாயம் விழும் என்கின்றனர் ஹைதராபாத் போலீசார். பைக் சீஸ் செய்கிறார்கள். அந்த வாகனங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

லாக்டௌன் நேரத்தில் நீங்கள் சாலையில் திரிகிறீர்களா? என்னை யாரும் பார்க்கவில்லை என்று அலட்சியமாக இருக்கிறீர்களா? அப்படியானால் இனி ஜாக்கிரதையாக இருங்கள். கவனம்…!

ஒரு லட்சம் கேமராக்கள் உங்கள் வாகனத்தை ஸ்கேன் செய்கின்றன என்ற விஷயத்தை மறந்து விடாதீர்கள். வீட்டிலிருந்து வெளியில் கிளம்பியதிலிருந்து திரும்ப வீட்டுக்கு வரும் வரை நீங்கள் எங்கு எங்கு அலைந்தீர்கள் என்று கேமராக்கள் உங்களை பதிவு செய்கின்றன. அதுமட்டுமின்றி டே டு டே உங்கள் வண்டியின் டிராக் ரெக்கார்டு பதிவு செய்து உங்கள் வண்டி நம்பர் மீது லிஸ்டை தயார் செய்கிறார்கள் போலீசார். பிறகு அனைவருக்கும் கஷ்டங்கள் தான்… இதிலிருந்து யாரும் மீறமுடியாது.

சைபராபாத் கமிஷனரேட் எல்லையிலேயே ஒரு லட்சத்து 15 ஆயிரம் கேமராக்கள் சாலையில் அலையும் ஒவ்வொரு வாகனத்தையும் டிராக் செய்கின்றன என்கிறனர் ஹைதராபாத் போலீசார்.

லாக்டௌன் வயொலேஷன் டிராகிங் சிஸ்டம் மூலம் ஒவ்வொரு வாகனத்திற்கும் மிக அதிக அளவில் செலான்கள் வரப்போகின்றன என்கின்றனர் போலீசார். இனி யாரும் என்னைப் பார்க்கவில்லை என்று சாலை மீது அலைந்தால் அடி பலமாக விழும் என்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.