ஏப்ரல் 22, 2021, 1:59 காலை வியாழக்கிழமை
More

  மஹாராஷ்டிர கூட்டணி அரசு இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கும்??

  சச்சின் வாஸேயை பார் (bars), உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மாதம் ரூ 100 கோடி மிரட்டி பணம் பறிக்க

  maharashtra - 1

  கட்டுரைத் தொகுப்பு: செல்வ நாயகம்

  “சஸ்பெண்ட் செய்யப்பட்ட சச்சின் வாஸேயை பார் (bars), உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மாதம் ரூ 100 கோடி மிரட்டி பணம் பறிக்க சொன்னார் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் (பவார் கட்சி NCP)” – மஹாராஷ்டிர முதல்வர் உதவ் தாக்கரேக்கு (சிவசேனா) மும்பை கமிஷனராக இருந்து பணி இடமாற்றம் செய்யப்பட்ட பரம்பீர் சிங் கடிதம்!

  இதுவரை…

  1, ராகுல் உள்ளிட்ட எதிரிகட்சியினர் தொடர்ந்து அம்பானி அதானியை குறிவைத்து தாக்கியதையும், டூல்கிட்டில் அம்பானி அதானி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததையும் தொடர்ந்து, 26 பிப்ரவரி அன்று, முகேஷ் அம்பானியின் வீட்டருகே 15 ஜெலாட்டின் வெடிபொருளுடன் ஸ்கார்ப்பியோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. (https://tinyurl.com/67n25va2)

  2, மார்ச் 4 அன்று, அந்த ஸ்கார்ப்பியோவுக்கு சொந்தக்காரராக கருதப்பட்ட மன்சுக் ஹிரேனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. (https://tinyurl.com/4wr3mccv)

  3, மார்ச் 5 அன்று மஹாராஷ்டிர சட்டசபையில், “ஸ்கார்ப்பியோவின் மன்சுக் ஹிரேன் கொல்லப்பட்டாரா என்பதை மும்பை காவல்துறையின் சச்சின் வாஸேயை கைது செய்து விசாரித்தால் தெரியவரும்” என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபாட்னவிஸ் காரசாரமாக பேச, உள்துறை அமைச்சரால் (தேஷ்முக் NCP) பதில் சொல்ல முடியவில்லை. ஃபாட்னவிஸ் கூற்றச்சாட்டை வாஸே மறுத்தார் (https://tinyurl.com/2jv66vfa).

  4, அடுத்த சில நாட்களில், “மன்சுக் ஹிரேன் கொலை செய்யப்பட்டார்” என அவரது மனைவி புகாரளித்த செய்திகள் வெளிவந்தன.

  5, வழக்கு விசாரணையை மும்பை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு (ATS) உத்தவ் அரசு மாற்றினாலும், ‘ஜெலட்டின்’ வெடிபொருள் சம்பந்தப்பட்டதால் (அது தடைசெய்யப்பட்ட வெடிபொருள்) தேசிய புலனாய்வு NIA விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை முடிவெடுத்தது. வழக்கை எடுத்து விசாரிக்க துவங்கியது மார்ச் 8இல் (https://tinyurl.com/sae3wdh4) .

  6, வழக்கம்போல கூட்டணியின் சிவசேனா – NCP – காங்கிரஸ் இதை எதிர்த்தன. என்றாலும், மத்திய அரசு தலையிடுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

  7, மன்சுக் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான பல ஆதாரங்கள் (https://tinyurl.com/wyjbp26a) கிடைத்தன. சச்சின் வாசேயை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் ஃபாட்னவிஸ் (https://tinyurl.com/y4d89jpy).

  8, ஜெலட்டின் அடங்கிய ஸ்கார்ப்பியோவை சச்சின் வாஸே தான் வைத்திருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் சிக்கின (https://tinyurl.com/4pwxcjby) . சச்சின் வாஸே வசித்த அப்பார்ட்மெண்டில் அந்த வண்டி நிறுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதே ஸ்கார்ப்பியோவில் தான் ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்தார் வாஸே (https://tinyurl.com/3h6xfttk).

  9, அம்பானிக்கு “டெலெகிராம்” மூலம் மிரட்டல் விடுத்த இரு பாய்மார் திஹார் ஜெயிலில் சிக்கினர். அவர்களுக்கு சிம் கார்டு கொடுத்தவர் என பலரும் தேசிய புலனாவிடம் மாட்டினர் (https://tinyurl.com/t62ear5s).

  10, கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் முன் ஜாமீன் கோரி நீதிமன்றம் நாடிய சச்சின் வாஸேக்கு நீதிமன்றம் பாதுகாப்பு அளிக்க மறுத்தது (மார்ச் 13 https://tinyurl.com/59fxa48h).

  11, மார்ச் 14இல் அவரை கைது செய்தது தேசிய புலனாய்வு (https://tinyurl.com/bbmnf5s2) .

  12, சச்சின் வாஸே பற்றி: என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லப்படும் இவர், 60க்கும் மேற்பட்டோரை என்கௌண்டர் செய்தவர். க்வாஜா யூனிஸ் என்பவரை என்கௌண்டர் செய்த விதத்தில் 2004இல் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். 16 ஆண்டுகால சஸ்பென்ஷனில் இருந்தார். அந்த காலக்கட்டத்தில் சிவசேனா கட்சியில் சேர்ந்தார்!
  ஜூன் 5 2020 இரவு 10 மணிக்கு இவரையும் இன்னும் சிலரையும் – கொரோனா காரணம் காட்டி, அதிக ஆட்கள் தேவை என்று கூறி – சஸ்பென்ஷனில் இருந்தவர்களை மீண்டும் பணியில் அமர்த்த முடிவெடுத்தார் கமிஷனர் பரம்பீர் சிங். ஜூன் 5 முடிவெடுத்து ஜூன் 6இல் பணியிலமர்ந்தார் வாஸே (https://tinyurl.com/nxnwun8w).
  சுஷாந்த் சிங் மரணம் முதல் அம்பானி பாம் வழக்கு வரை அத்தனை முக்கியமான வழக்குகளும் சச்சின் வாஸே பொறுப்பில். (அவரே குண்டு வைப்பார், அவரே எடுப்பார்???)

  13, சச்சின் வாஸேயின் பல நிறுவனங்கள் பற்றி எக்ஸ்போஸ் செய்தார் பாஜகவின் கிரித் சோமையா (https://tinyurl.com/4drse4w3 , https://tinyurl.com/d795n3nh) .

  14, ஏகப்பட்ட எக்ஸ்போஸேயாலும் அழுத்தத்தாலும் அடி பணிந்தது தாக்கரே அரசு. சச்சின் வாசே மீண்டும் பணி இடை நீக்கம் செய்யப்படுகிறார் (https://tinyurl.com/ywuv2az6).

  15, சச்சின் வாஸே ஸ்கார்ப்பியோவுடன் ஒரு இன்னோவாவும் வந்ததை சிசிடிவிகள் காட்ட, அதை மோப்பம் பிடித்த தேசிய புலனாய்வு, அந்த இன்னோவா “போலி” நம்பர் பிளேட் கொண்டு ஓட்டப்பட்டதை கண்டு பிடித்த்தனர். அதோடு, அந்த இன்னோவா மும்பை காவல்துறை கமிஷனர் அலுவலகத்துக்கு சொந்தமானது, மும்பை கமிஷனர் பரம்பீர் சிங் பொறுப்பில் உள்ளது உட்பட்ட விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன (https://tinyurl.com/2stmz42h) .

  16, சச்சின் வாஸே ஆதாரங்கள் பல சிசிடிவிக்களில் சிக்கின. லேப்டாப், மோபைல் எல்லாம் சிக்கின. பல ஆதாரங்களை அழித்திருந்தார் வாஸே. (https://tinyurl.com/7pzfjvx4) ஐபிஎல் பந்தய விவகாரமும் இதில் எழுந்தது (https://tinyurl.com/dm6a3f2c).

  17, அது வரை பாஜகவை திட்டிக்கொண்டிருந்த சிவசேனா, பிரச்சினை கமிஷனர் அலுவலகம் வந்ததும் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை (NCP) வசைபாட ஆரம்பித்தது (https://tinyurl.com/b5msez78). தீவிரத்தன்மையை உணர்ந்து சரத் பவார் கட்சிக்கூட்டத்தை கூட்டினார் (எப்படி தப்பிப்பது என்று ஆலோசனை).

  18, கமிஷனர் வண்டி பாம் வைக்க உதவியது என்ற விஷயம் வெளிவந்ததோடு, சிவசேனாவின் குற்றச்சாட்டுகளும் சேர, NCP உள்துறை அமைச்சர் பரம்பீர் சிங்கை பணி இடமாற்றம் செய்தார். புதிதாக ஒருவரை (அவரும் ஊழல்பேர்வழி தான்) கமிஷனராக நியமிக்கின்றனர். அதோடு, “பரம்பீர் சிங் மன்னிக்க முடியாத குற்றம் செய்துள்ளார்” என்றும் பேட்டி கொடுக்கிறார் உள்துறை அமைச்சர். (https://tinyurl.com/2zuf5kwh).

  19, சச்சின் வாஸே பன்றிஸ்தானுடன் தொடர்பிலிருந்தார் என்ற விவரமும் வெளிவருகிறது (https://tinyurl.com/tf9wn5db). வாஸே பொறுப்பில் மெர்சிடிஸ் உள்ளிட்ட பல வாகனங்கள் இருந்ததும், அவர் வண்டியில் நோட்டு எண்ணும் எந்திரம் (cash counting machine) வைத்திருந்ததும் தெரிய வந்தது. அதோடு, பல போலி நம்பர் பிளேட்டுகளும் சிக்கின (ஒரிஜினல் பிளேட்டில் ஓட்டும் வழக்கமில்லை போல… செய்வது அத்தனையும் திருட்டு வேலை). https://tinyurl.com/749thytf .

  20, ஸ்கார்ப்பியோவுக்கு சொந்தக்காரராக கருதப்படும் மன்சுக் ஹிரேன் மரணத்தை தன் வசம் வைத்துக் கொள்ள முயற்சித்தது மும்பை பயங்கரவாத தடுப்பு பிரிவு. அதையும் எடுத்துக் கொண்டது NIA இன்று (https://tinyurl.com/5yskwxmd).

  21, சிவசேனாவை சிக்கலில் மாட்டிவிட பவார் NCP முயற்சிப்பதை உடைக்க NCP மீது குற்றம் சாட்டி பரம்பீர் சிங் கடிதம்!

  ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள் இப்போது. இந்த கூட்டணி தாக்குப்பிடிக்காது வெகுகாலம். அடுத்த தேர்தலில் பாஜக – சேனா – NCP + காங் நிற்க வாய்ப்பு. என்றாலும், சேனாவின் எதிர்காலம் கேள்விக்குறி. சேனா வாக்காளர்கள் பாஜக – NCP பக்கம் சிதற வாய்ப்பு. உதவாக்கரை கதை முடியும்.

  எல்லா பிரச்சினைகளும் ஆரம்பித்தது பால்கர் சாதுக்கள் கொலை வழக்கில்…. ‘அன்புமார்க்க’ மதமாற்ற கூட்டம் சாதுக்களை அடித்துக் கொன்றதாக செய்தி. அந்த வழக்கை மூடி மறைக்க முயற்சித்தது உதவாக்கரை அரசு. அதையடுத்த் சுஷாந்த் சிங் உள்ளிட்ட பலரது மரணங்கள் / கொலைகள்…

  இதை எக்ஸ்போஸ் செய்த அர்னாப் மீதும் அவரது ரிபப்ளிக் ஊழியர்கள் மீதும் ஈவு இரக்கமின்றி வழக்குகள் போட்டு சிறையில் அடைத்தது உதவாக்கரை அரசு.

  ரிபப்ளிக் டிவியை TRP மோசடியில் சிக்க வைக்க பரம்பீர் சிங்கை கொண்டு முயன்றது சோனியா சேனா அரசு. சோனியா சேனாவுக்கு ஆமாம் சாமி போடும் மும்பை பஞ்சாயத்தும் பொறுமை இழந்து, “3 மாதங்களாக விசாரிக்கிறீர்கள். ரிபப்ளிக் மீது எந்த புகாரும் இல்லை. ஏனிந்த நாடகம்?” என்ற ரீதியில் கேள்வி எழுப்பியது. அதோடு, டி ஆர் பி விவகாரத்தில் உண்மை குற்றவாளி இண்டியா டுடே என்பதும் வெளிவந்துள்ளது (https://tinyurl.com/2sztewes, https://tinyurl.com/436h6kdc).

  டிஆர்பி வகையில் அமலாக்க பிரிவு மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களின் (Fakt Marathi, Box Cinema and Maha Movie ) ரூ 32 கோடி ரூபாய் சொத்தை முடக்கியுள்ளது. ரிபப்ளிக் பெயர் வரவில்லை. இண்டியா டுடே வரும் விரைவில்!! (https://tinyurl.com/27cc4dh6)

  Fakt Marathi – சேனலுக்கு அர்த்தம் Only Marathi. 😉

  ஃபாட்னவிஸை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்த உதவாக்கரை தாக்கரே எதிர்காலமின்றி போவார்!

  Removed over #AntiliaCase, Mumbai’s ex-CP Param Bir Singh writes to #Maharashtra CM that state’s home minister Anil Deshmukh asked suspended crime beach officer #SachinWaze a target to collect ₹100 Cr for him.
  https://twitter.com/utkarsh_aanand/status/1373262539715276803

  1. Shri Anil Deshmukh, Hon’ble Home Minister, Maharashtra has stated in an interview conducted under the aegis of ‘Lokmat’ and extensively reported on 18th March 2021 that: (a) there were serious lapses committed at my office, by the Mumbai Police and me in the investigation Antilia incident; (b) my serious lapses are not pardonable; and, (c) my transfer is not on administrative grounds.
  2. At one of the briefing sessions in the wake of the Antilia incident held in mid-March 2021 when I was called late evening at Varsha to brief you, I had pointed out several misdeeds and malpractices being indulged into by the Hon’ble Home Minister. I have similarly briefed the Hon’ble Deputy Chief Minister, Maharsahtra, the President of the Nationalist Congress Party, Shri Sharad Pawar and other senior Ministers also about the misdeeds and malpractices. On my briefings, I noticed that some of the Ministers were already aware about some aspects mentioned by me to them.
  3. In the aforesaid context, Shri Sachin Vaze who was heading the Crime Intelligence Unit of the Crime Branch of the Mumbai Police was called by Shri Anil Deshmukh, Hon’ble Home Minister, Maharashtra to his official residence Dyaneshwar several times in last few months and repeatedly instructed to assist in collection of funds for the Hon’ble Home Minister. In and around mid-February and thereafter, the Hon’ble Home Minister had called Shri Vaze to his official residence. At that time, one or two staff members of the Hon’ble Home Minister including his Personal Secretary, Mr. Palande, were also present. The Hon’ble Home Minister expressed to Shri Vaze that he had a target to accumulate Rs. 100 crores a month. For achieving the aforesaid target, the Hon’ble Home Minster told Shri Vaze that there are about 1,750 bars, restaurants and other establishments in Mumbai and if a sum of Rs. 2-3 lakhs each was collected from each of…

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »