17/10/2019 8:24 AM
அடடே... அப்படியா? 'மோடி அரசு' இந்தியாவின் கடனை அடைத்தது எப்படி?

‘மோடி அரசு’ இந்தியாவின் கடனை அடைத்தது எப்படி?

-

- Advertisment -
- Advertisement -

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் தேங்கி இருக்கும் இந்திய மக்களின் கருப்பு பணத்தை மீட்க… சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு (Special Investigation Team ) உச்ச நீதிமன்றம் 2011 லேயே உத்தரவிட்டது.

அந்த உத்தரவை செயல்படுத்தாமல்… இன்று நேர்மையாளர்களை போல பேசும் மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் 2014 வரை கிடப்பில் போட்டார்கள்.

நமது மோடி அவர்கள் பிரதமரானதும்… போட்ட முதல் கையெழுத்து இதுதான். இதற்கு பிறகு அந்த குழு படிப்படியாக தகவல்கள் சேகரித்து வந்தது. பிறகு 2016ல்,  ‘தாமாக முன்வந்து வரி பாக்கியை செலுத்துங்கள், வெறும் அபராதம் மட்டும் விதித்து விட்டுவிடுகிறோம்… நாங்களாக பிடித்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும்.’ என்று எச்சரித்து கறுப்பு பண பதுக்கல்காரர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார் மோடி.

அதன் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு தாமாக முன்வந்து வரி காட்டினார்கள் பல பதுக்கல்காரர்கள். அதன் அடிப்படையில் இந்திய அரசுக்கு ரூ.73,920 கோடிகள் வரி கிடைத்தது. அதாவது, ரூ.73,920 கோடிகள் கருப்பு பணம் அழிக்க பட்டது.

ஆனால், வாய்ப்பு கொடுத்ததும் பலர் திருந்தவில்லை. ஆகையால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக Demonetization பாய்ந்தது. இதனால் கணக்குப்படி வங்கிகளுக்கு வராத பணம் என்னவோ 16,000 கோடிகள் தான். ஆனால்,  ஏதோ 16,000 கோடிகள் மட்டுமே கருப்பு பணம் அழிக்கப்பட்டதாக பரப்பப்படும் விஷயம்… ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியில் உருவாக்கிய பெரும் பொய்.

‘பணம் வங்கிகளுக்கு வந்துவிட்டாலே அது வெள்ளை பணமாக மாறிவிட்டது’ என்கிற தகவல் மிகவும் தவறானது. ஏனென்றால், அந்த பணத்திற்கு அதன் சொந்தக்காரர் வருமான கணக்கு காண்பிக்க வேண்டும். Demonetization க்கு பிறகு செய்யப்பட Raidகளினால் மட்டுமே கிட்டத்தட்ட ரூ.25,000 கோடிகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.

இவ்வாறு, முதல் மூன்றாண்டுகளில் மொத்தம் ரூ. 1.37 லட்சம் கோடிகள் வருமானவரித்துறை Raid மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், Demonetization மூலம், கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கு மேல் போலி நிறுவனங்கள் (shell companies) கண்டுபிடிக்கப்பட்டன.

இது ஏழைகளின் நிறுவனங்கள் இல்லை. பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் நிறுவனங்கள்… அவை அனைத்தையும் தடை செய்து, அதின் முதலாளிகளை மற்ற நிறுவனங்களுக்கும் தலைமை தாங்க தடை செய்தது.

அதில் சில முக்கியமான புள்ளிகள் சசிகலா, முன்னாள் காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி போன்றவர்கள். Demonetization போது, இந்த நிறுவனங்களால் டெபாசிட் செய்யப்பட தொகை ரூ. 37,500 கோடிகள் இந்த பணத்தை உரிமை கோரி யாரும் வரவேயில்லை. ஆகையால், இந்த பணமும் இப்பொழுது அரசாங்கத்துக்கு சேர்ந்தது.

இதை தவிர…மேலும் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் கோடிகளுக்கு இதுவரை ஒழுங்காக கணக்கு காண்பிக்கபடவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

இதுவும் அரசாங்கத்திற்கு வரப்போகும் பணம். இவ்வாறு,  பிரதமர் மோடியால் இதுவரை மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்று பார்க்கலாம்.

வங்கிக்கு வராத பணம் = 16,000 கோடிகள்
ரெய்டுகள் மூலம் = 1,37,000 கோடிகள்
Voluntary disclosure = 73,920 கோடிகள் + 37,500 கோடிகள்
மொத்தம் = 2,64,020 கோடிகள்.
மேலும், இது வரை கணக்கு காட்டப்படாத 3 லட்சம் கோடிகள் இதில் சேர வாய்ப்புள்ளது.

இதை தவிர, மானியங்களுடன் ஆதாரை இணைத்ததில் அரசாங்கம் சேமித்த பணம் (இடைத்தரகர்கள் வாங்கும் கமிஷன்களை தவிர்த்ததனால்) 85,000 கோடிகள். மேலும்,
Make in India மூலம், வெளிநாடுகளிலிருந்து இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் இறக்குமதியை குறைத்து…

உள்ளூரில் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தியதன் மூலம் சேமித்த பணம் 1 லட்சம் கோடிகள். இவ்வாறு சிறந்த நிர்வாகம், மற்றும் நடவடிக்கைகள் மூலம் அரசின் வருவாயை பெருக்கிய வழிமுறைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதெல்லாம் யார் பணம்? நம்முடைய பணம். ‘இந்த பணமெல்லாம் இப்பொழுது எங்கே?’  என்று கேட்கலாம். மோடி அரசு நேரடியாக பணத்தை கொடுத்து… மக்களை சோம்பேறியாக்க விரும்பவில்லை. ஆகவே, தொழில் முதலீடுகள், உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தினார்கள். இதன்மூலம் வேலை வாய்ப்புகளை உண்டாக்கினார்கள்.

அப்படி செய்ததால்தான் முத்ரா திட்டத்தின் கீழ் பல கோடி சிறு முதலாளிகளை உருவாக்கினார்கள். இன்னும் பல இடங்களில் புதிய சாலைகள் அமைப்பது,
மின்சார வசதி ஏற்படுத்தி தருவது போன்ற விஷயங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு முன், இந்திய அரசு பற்றாக்குறை பட்ஜெட் போட்டுக் கொண்டிருந்தது. மோடி வந்த பொழுது பட்ஜெட்டில் இருந்த பற்றாக்குறை 4.5 % ஆக இருந்தது. அது இப்பொழுது 3.3 % ஆக குறைந்திருக்கிறது. இதனால் நமக்கென்ன நன்மை?

இந்திய அரசாங்கம் மேலும் கடன் வாங்குவது, ரூபாய் நோட்டடிப்பது குறையும். இதனால் விலைவாசியும் உயராது. காங்கிரஸ் அரசின் கீழ் பல லட்சம் கோடிகள் ஊழல்களைத்தான் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால், இப்பொழுது தான் லட்சக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் மிச்சமாகி வருவதை பார்க்கிறோம். இதற்கு பெயர்தான் நல்ல நிர்வாகம். இதன் பலன் உங்களுக்கு தெரிய… இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். இவ்வாறு, ‘நம் தேசம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது’ என்பது மட்டும் உறுதி.

தயவு செய்து ஊடகங்களின் போலி செய்திகளையும், மீம்ஸ் பக்கங்களையும் நம்பி உணர்ச்சிவசப்பட்டு நம்பிவிடாதீர்கள். உண்மைகளை விவரமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு உண்மையாகவே இந்தியாவின் மீது அக்கறை இருந்தால்… இதை சாமானியருக்கு புரியவையுங்கள்.

  • சங்கர் ராமநாதன்
- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: