பல ஆண்டுகளுக்கு முன்னர் “வேத ராமன்” என்னும் தலைப்பில் ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாசாரியார் அதிஅத்புதமாக உபன்யாசம் செய்துள்ளார். அவரின் உபன்யாச தொகுப்பு “வேத ராமன்” என்னும் புத்தகமாக வெளிவரும் சமயத்தில், அதனை பரிசோதித்து வெளியிடும் பாக்கியம் ஸ்ரீ உ. வே. அனந்தபத்மநாபாசாரியார் (APN சுவாமி) அவர்களுக்கு கிடைத்தது. பிறகு மேலும் பல் வேறு விதமாக ஆராய்ச்சி செய்த ஸ்ரீ APN சுவாமி, பாலகண்டம் முதற்கொண்டு ராமாயணத்தில் வேத ஒலியை அனைவரும் அறியும் வண்ணம் உபன்யாசம் செய்ய ஆவல் கொண்டார். அதன் பயனாக “வேத ராமன்” என்னும் தலைப்பில் ஆரண்ய காண்டம் வரை விரிவாக உபன்யாசம் செய்துள்ளார். இதை விளக்கும் ச்லோகங்களையும் ராமன் அருளால் தானே இயற்றியுள்ளார்.

ஸ்ரீ ராம நவமி கொண்டாடும் இத்தருணத்தில் அனைவரும் கேட்டு மகிழும் வண்ணம் ஸ்ரீ APN சுவாமியின் வேத ராமன் உபன்யாசம், அவரின் Youtube Channelலில் உங்களுக்காக வெளியிடப்படுகிறது.

ஆஸ்திக மஹாஜனங்கள் இந்த அரிய உபன்யாசத்தை கேட்டும், மேலும் இந்த ச்லோகங்களை பாராயணம் செய்தும் ராமனின் அனுக்கிரஹத்தை பெற்று இன்புறலாம்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...