குழந்தைகள் வீட்டில் தனிமையை உணரக் கூடாது
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பேஷன் டிசைனிங் துறையை சேர்ந்த சுசன்னா என்பவரை கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் செய்தார்.
இத்தம்பதிக்கு 2 மகன்கள் உண்டு. கருத்து வேறுபாடு காரணமாக 2013-ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து பின்னர் 2014-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் ஏப்ரல் 21-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இது அவசியமான நடவடிக்கை என்றார். இதையடுத்து தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார் ஹிருத்திக் ரோஷன்.
எனவே தனது குழந்தைகள் வீட்டில் தனிமையை உணரக் கூடாது என்பதற்காக ஹிருத்திக்கின் வீட்டுக்கு வந்த சுசன்னே மகன்களுக்கு துணையாக வசிக்க முடிவெடுத்துள்ளார்.
இதை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு சுசன்னேவுக்கு நன்றி தெரிவித்திருக்கும் ஹிருத்திக் ரோஷன், சுசன்னே தன் வீட்டில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.