சிரீரெட்டியால் சிரிக்குது சினிமா உலகு! சங்கத்து வேலய விட்டுட்டு நள்ளிரவுல அங்கத்து வேல பாத்த விஷால் ரெட்டி!

டோலிவுட், கோலிவுட் இரு வட்டாரங்களிலும் அண்மைக்காலமாக பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமாக்களில் அதிகம் நடித்திருந்தால் கூட இவ்வளவு பிரபலம் ஆகியிருப்பாரா தெரியாது… ஆனால் சினிமா வாய்ப்புக்காக ஒவ்வொருவரிடம் சென்று கெஞ்சும் போதும், தன்னை ஏமாற்றி உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு, வாய்ப்புகளைத் தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்று சினிமா உலகத்தின் பிரபலங்களை பட்டியலிட்டு பிரபலமாகி வருகிறார் ஸ்ரீ ரெட்டி.

விக்கிலீக்ஸ் சுசீலீக்ஸ் என்றெல்லாம் டிவிட்டர் ட்ரெண்ட் ஆன நிலையில் தற்போது தமிழ்லீக்ஸ் என்று இவர் குறித்துள்ள விஷயங்கள் இப்போது திடீர் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. தமிழில் தனக்கு வாய்ப்பு தருவதாகச் சொல்லி தன்னை ஏமாற்றியவர்களாக ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என பட்டியலிட்டுள்ளார். இந்தப் பட்டியல் மேலும் தொடரும் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் என்றெல்லாம் சங்கத்து வேலையைப் பார்ப்பதற்காக, ஸ்ரீரெட்டி நள்ளிரவு போன் செய்து விஷால் மிரட்டியிருப்பதாக ஸ்ரீரெட்டியின் பேஸ்புக் பதிவு தெரிவிக்கிறது.

தமிழ் நடிகர் விஷால் ரெட்டியின் மூல தாம் மிரட்டப் படுவதாக உணர்கிறேன் என்று கூறியுள்ள ஸ்ரீரெட்டி, ஆனால் கோலிவுட்டின் இருண்ட பக்கத்தை நிச்சயமாக வெளியிட விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீரெட்டியின் பேஸ்புக் பதிவுகளில் கருத்திடுவதும் பகிர்வதும் பரவலாக இருக்கிறது. மோசமான கொச்சை மொழிகளால் கருத்துகள் இடப்படுகின்றன. காரணம் ஸ்ரீரெட்டி குறிப்பிட்ட விஷயங்களே கொச்சை மொழியில் இருப்பதால்!

சங்கத்து வேலய பார்றான்னா… அங்கத்து வேலய பாத்துருக்கான்.. என்று விஷாலை கிண்டல் செய்கிறார்கள்.

இன்னும் ஒருபடி மேலே போய், ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து, நடிகர் விஜய் பேரும் அடிபடுகிறது. தளபதி எங்கள் தளபதி… கூட ஸ்ரீரெட்டி விவகாரத்தில்… என்று வாட்ஸ்அப்களில் ஒரு தகவல் உலவுவதால், விஷாலும் விஜய்க்கு பரிந்து கொண்டு இவ்வாறு மிரட்டியிருக்கலாம் என்று சமூகப் பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.