காட்டுப்பகுதியில் 10 பேர் கிரிக்கெட் விளையாடியதையும் 4 பேர் கேரம் விளையாடியதையும் தெளிவாக தேடி கண்டுபிடித்து அவர்கள் பயந்து ஓடியதை
உலகத்துக்கே படங்காட்டி பல கோடி பேரை சிரிக்க வைத்த தமிழக காவல் துறையின் பறக்கும் கேமராவிற்கு(ட்ரோன்) காங்கேயம் சாலையில்
தனியார் அமைப்பினர் 300 பேர் உட்கார்ந்து சாலை மறியல் செய்தது அதன் கண்களுக்கு தெரியவில்லையா..??
இல்லை.. பறப்பதற்கு சார்ஜ் இல்லையா?!
ஓடுகிறவர்களை மட்டுமே துரத்தும் ஸ்பெசல் கேமராவாக இருக்குமோ… ஊருக்கு அடங்காத சிலர் செய்யும் அடாவடிகளினால் அப்பாவிகள் இன்னும் எத்தனை நாளைக்கு வீட்டினுள் இருப்பது?
ஐயா தமிழகத்தை ஆளுகிறவர்களே.. காவல்துறையின் கை கட்டை அவிழ்த்து விடுங்கய்யா.. சட்டமும் ஒழுங்கும் நீதியும் நேர்மையும் அனைவருக்குமே..
இப்படிக்கு
ட்ரோன் தேடி