மாமன் மச்சான பாக்க வந்தேன்னு சொல்லிட்டு உங்கள் ஊருக்கு யாராவது டூவீலரில் வந்தால்… அலர்ட் ஆகுங்க உடனடியா போலீஸுக்கு தகவல் தெரிவியுங்க என்று கூறி போலிஸாரின் ஆடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில்… சென்னை முழுதும் காட்டுத்தீயாய் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் காவல் துறையினர் கடும் பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளனர். ஆயினும் அதை மீறி சென்னையில் இருந்து பலர் டூவீலர்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு வேறு வேறு பாதைகளில் செல்கின்றனர்.
தடையை மீறி தங்கள் ஊர்களில் இவர்கள் ஊடுருவினால் அந்தந்த ஊர்களில் கொரோனா பாதிப்பு நிலைமை மேலும் மோசமாகும். நாம் நமது ஊரில் நமது நகரத்தில் இத்தனை நாள் கஷ்டப்பட்டு தனிமைப் படுத்திக் கொண்டது வீணாகிவிடும். ஆகவே பொதுமக்கள் தங்கள் ஊர்களிலும் தெருவிலும் யாராவது வெளியூரிலிருந்து அல்லது சென்னை அல்லது மற்ற மாவட்டங்களில் இருந்து புதிதாக ஊடுருவினால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அவர்கள் உடனடியாக தனிமைப் படுத்தப் பட்டால் நம் பகுதி பாதுகாக்கப்படும். கிராமங்களில் இதே போல் யாராவது மாமன் மச்சானப் பார்க்க வருவதாக சொன்னால் உடனே கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோரிடம் தகவல் சொல்ல வேண்டும்.
குறிப்பாக சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து யார் வந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரவேண்டும். ரோந்து பணியில் காவல்துறை எந்த நேரமும் பணியில் உள்ளது. ஏற்கனவே அமலில் இருக்கும் தடை உத்தரவில் எந்த தளர்வும் அறிவிக்கப்படவில்லை. 5 பேருக்கு மேல் யார் எங்கு கூடினாலும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது… இந்த ஆடியோ இப்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் வைரலாகி வருகிறது.
காவல்துறையின் மிக முக்கிய அறிவிப்பு ஆடியோ வெளியீடு…