கேரளாவில் மீண்டும் ஒரு கன்னியாஸ்திரி மர்ம மரணம். திருவல்லா பாலியேக்கர கன்னியாஸ்திரி மடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்த திவ்யா டி ஜோய் என்ற 21 வயதே ஆன இளம்பெண் அங்குள்ள கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
பாதிரியார்களின் பாலியல் சீண்டல்களை வெளிப்படுத்தியதால் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திரி லூஸி களப்புரைக்கல் தன்னுடைய முகநூல் பதிவில் இந்த பெண்ணின் பெற்றோருக்காவது நீதி கிடைக்குமா என்று பதிவிட்டுள்ளார். இரவில் ஏதேனும் ஒரு பாதிரியின் படுக்கை அறையில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும் பயிற்சி கன்னியாஸ்திரிகள் மறுநாள் கிணற்றிலோ, தண்ணீர் தொட்டியிலோ பிணமாக மீட்கப்படுவது என்றுதான் தீரும் என வேதனை தெரிவித்துள்ளார்.
News Source: Student nun’s death in Thiruvalla: Kerala Women’s Commission seeks report from police.
அவர் தன்னுடைய பதிவில் இதுவரை கேரளாவில் கொல்லப்பட்ட கன்னியாஸ்திரிகளின் பட்டியலை வெளிப்படுத்தியுள்ளார்.
- கன்னியாஸ்திரி மடத்தின் தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த சிஸ்டர் லிண்டா.
- கொல்லம் தில்லேரியில் கொல்லப்பட்ட சிஸ்டர் மஃக்தேல.
- ஃபயஸ் டென்ஸ் கான்வென்ட் கிணற்றில் இறந்து கிடந்த சிஸ்டர் அபயா.
- கொல்லம் அருகே கொட்டியத்தில் இறந்த நிலையில் கிடந்த சிஸ்டர் மெர்சி.
- புல்பள்ளி மரக்காவு கான்வென்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிஸ்டர் ஆனிஸ். 1998. கோட்டயம் பாலா கான்வென்டில் கொல்லப்பட்ட சிஸ்டர் பின்ஸி.
- கோழிக்கோடு அருகே கான்வென்ட் கிணற்றில் பிணமாக மிதந்த சிஸ்டர் ஜ்யோதீஸ்.
- பாலா ஸ்னேஹகிரி கான்வென்டில் கொல்லப்பட்ட சிஸ்டர் போல்ஸி.
- ரான்னி அருகே மடத்தில் கொல்லப்பட்ட சிஸ்டர் ஆன்சி வர்கீஸ்.
- கொல்லம் அருகே கன்னியாஸ்திரி மடத்தில் கொல்லப்பட்ட சிஸ்டர் அனுபா மரியா.
- திருவனந்தபுரம் அருகே நீர்நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சிஸ்டர் மேரி ஆன்சி.
- பாலா அருகே கான்வென்ட்டில் தலையில் காயத்தோடு இறந்து கிடந்த சிஸ்டர் அமலா.
- கொல்லம் பத்தனாபுரத்தில் மவுண்ட் தாபூர் கான்வென்ட் கிணற்றில் பிணமாக கிடந்த சிஸ்டர் சூசன் மாத்யூ.
நேற்று இதோ திவ்யா டி ஜோய்..
இதில் ஒரு கொலைக்கும் சாட்சியில்லை, இதுவரை யாரும் தண்டிக்கபடவுமில்லை, வழக்கு தொடுக்கப்பட்டாலும் சபைக்கு கேவலம் என கூறி இறந்த கன்னியாஸ்திரி குடும்பத்துக்கு பணத்தை கொடுத்து வாயடைக்க வைப்பதும், செய்தி சானல்களில் ஒரு நாள் செய்தியாக வந்து ஒடுங்கிவிடுவதுமே வாடிக்கையான நிகழ்வு.
மாறாக இம்மாதிரி ஒரு மர்ம மரணம் ஹிந்து ஆசிரமத்தில் நிகழ்ந்திருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்து பார்க்கிறேன். இந்த டிவி சானல் மாமாக்கள் வானுக்கும் பூமிக்குமாய் குதித்திருக்க மாட்டான்கள்?? பெண்ணுரிமை போராளிகள், எழுத்தாளர்கள், கலாச்சார காவலர்கள்னு கிளம்பி ஆசிரமத்தை எரிச்சிருக்க மாட்டானுங்க?? ஆனால் மிஷனரி மரணங்கள்னு தெரிஞ்சா இவனுங்க சப்தநாடியும் ஒடுங்கிவிடும். மீறி வாயை திறந்தால் பணத்தால் மூடி விடுவார்கள்.
உங்கள் குடும்பத்துக்கு தெய்வ அனுக்ரஹம் கிடைத்துள்ளதுன்னு சொல்லி ஏழைகள் வீட்டில் பிறக்கும் இரண்டு பெண் குழந்தைகளில் ஒன்றை கன்னியாஸ்திரி ஆக்க சொல்லி கடவுளின் பெயரால் நேர்ச்சை இட வைத்து, குறிப்பிட்ட வயதுக்கு மேல் கன்னியாஸ்திரி மடங்களில் தங்க வைத்து அவர்களை தங்கள் மன வக்கிரங்களை தீர்க்கும் பாலியல் அடிமைகளாக வைத்திருக்கும் இந்த கத்தோலிக்க பாதிரிகளை
தண்டிக்கவேனும் இதோ வருக்கிறார்னு இவர்கள் கூப்பாடு போட்டு அழைக்கும் அவர் கொஞ்சம் சீக்கிரம் வரட்டும்.
- பாரதி கண்ணம்மா