திருச்சி சாலை ஓரத்தில் உறங்கியவர் தலையில் கல்லை போட்ட காஜாமொய்தீன் என்பவர் கைது!

உள்ளூர் செய்திகள் திருச்சி பொது தகவல்கள்
kajamohaideen - 2026

திருச்சியில் சாலையோரத்தில் தூங்கியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவரை கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மலைக்கோட்டை கீழரண்சாலையைச் சேர்ந்தவர் ஜப்பான் என்கிற செல்வராஜ் ( 55). இவர் மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து தேரடி பஜாரில் பகுதியில் தெரு ஓரத்தில் வசித்து வந்தார். சனிக்கிழமை அதிகாலை சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தலையில் கல்லை போட்டு நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த காஜாமொய்தீன் என்பவர் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

சிறிது நேரத்தில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே செல்வராஜ் உடலை கைப்பற்றி திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.