
ஹிந்துக்கள் அல்லாதோர் பழநி கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை கோயில் முன்பாக நிறுவ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, ஏற்கெனவே இருந்த அறிவிப்புப் பலகை நீக்கப்பட்டது ஏன்? என்று அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பியதுடன், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும், ஹிந்து அல்லாதோர் கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் அங்கே நிறுவ வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இது கூறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தெரிவித்த போது, பழனி ஞானதண்டாயுதபானி திருக்கோவிலில், ஹிந்து அல்லாதோர் நுழைய தடை விதிக்கும் பதாகையை அகற்றிய அறங்கெட்ட அறநிலையத்துறையின் செயலை எதிர்த்து, விஸ்வ ஹிந்து பரிஷத் – திருக்கோவில், அர்ச்சகர், புரோகித் தென் தமிழக மாநில அமைப்பாளர் செந்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. எங்கள் சார்பாக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர், பழனி கோவிலுக்குள் ஹிந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை விதித்ததோடு மட்டுமன்றி உடனடியாக அந்த பதாகையை வைக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் எதன் அடிப்படையில் பதாகையை இந்து சமய அறநிலையத்துறை அகற்றியது, அகற்ற உத்தரவிட்டது யார் என்ற கேள்வியும் எழுப்பினார்? இதன் மூலம், இந்து சமய அறநிலையத்துறையின் கருப்பு ஆடுகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது விசுவ ஹிந்து பரிஷத் – திருக்கோவில், அர்ச்சக், புரோகித் பேரமைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று குறிப்பிட்டனர்.