சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Published:

cholavanthan pralayanatha sivan - 2026

சோழவந்தான்: மதுரை அருகே, சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.

பிரசித்தி பெற்ற பிரளயநாத(சிவன்)கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, நந்தியம்பெருமானுக்கும், சிவன், சனீஸ்வரலிங்கம், நரசிம்மர் ஆகியோருக்கு 11அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு , பிரசாதம் வழங்கப்பட்டது. எம்.வி.எம். குழுமத் தலைவர் மணி முத்தையா,கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன்,தக்கார் இளமதி பணியாளர்கள் பூபதி வசந்த் மற்றும் கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சிவ பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். பூஜைகள் நடந்தது.

இதேபோல் மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாய வாநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்,விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில், மதுரை மேலமடை சௌபாக்ய விநாயகர், மதுரை தெப்பக்குளம் முத்தீஸ்வரர், அண்ணாநகர் சர்வேஸ்வரர், திருமங்கலம் மீனாட்சியம்மன், மேலூர் கல்யாண சுந்தரேஸ்வரர் உள்பட இப்பகுதி உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Related articles

Recent articles

spot_img