பக்தர்களை அசிங்கப் படுத்தும் அறநிலையத் துறைக்கு இந்து முன்னணி கண்டனம்!

Published:

hindumunnani - 2026

நினைத்த இடத்தில் ஏலம் விடுவதும், அதிகாரம் செய்வதும், பக்தர்களை அசிங்கமாக பேசுவதும் கோயிலுக்கான நடைமுறையை மாற்றி அமைக்க திட்டமிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

பழனி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சேவல்கள் ஏலம் விடும் நடைமுறை இருந்தது. அந்த ஏலம் விடுவது பழனி கோயிலில் மேல்பிரகாரத்தில் வைத்து ஏலம் விடுவது வழக்கம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தற்போது உதவி ஆணையராக இருக்கக்கூடிய திருமதி. லட்சுமி என்பவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது போல அவர் நினைத்த இடத்தில் ஏலம் விடுவதும், நிணைத்த இடத்தில் நின்று அதிகாரம் செய்வதும், பக்தர்களை அசிங்கமாக பேசுவதும் கோயிலுக்கான நடைமுறையை மாற்றி அமைக்க திட்டமிடுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது மேல் பிரகாரத்தில் இருக்கக்கூடிய சேவல்களை கீழே கொண்டுவந்து கடைகளில் வியாபாரம் செய்வது போல வைத்து ஏலம் விட்டார். அந்த ஏலம் எடுப்பதில் பல பேருக்கு போட்டியும் தகராறும் வரக்கூடிய சூழ்நிலை அமைந்தது. இதனால் அங்கு இருக்கக்கூடிய பக்தர்களும் இந்து முன்னணி நிர்வாகிகளும் எப்போதும் நடக்கின்ற நடைமுறைப்படி ஏலம் விடுமாறு கூறினார்.

அதற்கு அந்த உதவி‌ ஆணையர் லட்சுமி அவர்களும் அவருடன் இருக்கும் அதிகாரிகளும் பக்தர்களிடம் தாறுமாறாக வாக்குவாதம் செய்தனர். அந்த நேரத்தில் தட்டிக் கேட்க வந்தவர்களைப் பார்த்து “லூசு மாதிரி பேசக்கூடாது, இந்த கோயிலில் எங்கே ஏலம் விட வேண்டும் என்று எனக்கு தெரியும், நான் நினைத்த பக்கம்தான் ஏலம் விடுவேன் உங்களால் என்ன செய்ய தெரியுமோ செய்யுங்கள்” என்று எதேச்திகாரமாக பேசினார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இது அங்கு இருக்கக்கூடிய பக்தர்களின் முகம் சுளிக்க வைத்தது இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, மேலதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் தற்போது வரை அந்த உதவியாளர் லட்சுமி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக முழுவதும் இருக்கக்கூடிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த கோவிலுக்கு அவர்களே முதலாளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். வரக்கூடிய பக்தர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அந்தக் கோயிலிலே எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கலாம் என்ற எதேச்சதிகார போக்கை காட்டுகின்றனர்.

கோயிலை நிர்வாகம் செய்வது மட்டுமே அறநிலையத்துறை வேலை. பக்தர்களுடைய உணர்வுக்கும் கோவில் சம்பந்தமான ஆலோசனைகளை பெற்று அதன்படி நடைமுறைப்படுத்துவது தான் இந்து சமய அறநிலை துறையின் வேலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்று தொடர்ந்து பழநி மற்றும் திருச்செந்தூர் கோவில்களில் இணை ஆணையர் அலுவலகம் மூலம் பக்தர்களிடம் நேரடியாக தகராறு செய்வதையும் பக்தர்கள் உணர்வுக்கு மதிப்பளிக்காததையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

வருங்காலத்தில் இதுபோன்று நடக்கும் பட்சத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Related articles

Recent articles

spot_img