
சிவகங்கை: தேவகோட்டை ராம்நகரில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது
இந்த அலுவலகம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. 2017ஆம் ஆண்டு புதிதாக பத்திர பதிவு அலுவலகம் கட்டப்பட்டது அலுவலக கட்டிடம் உயரமாக கட்டி முடிக்கப்பட்டது. அலுவலகத்திற்கு முன்புறம் தாழ்வாக இருந்தது.
ராம்நகரில் இயங்கக்கூடிய தாலுகா அலுவலகம் பொதுப்பணித் துறை அலுவலகம் முன்சிப் கோர்ட் சார் ஆட்சியர் அலுவலகம் ஆகியவை மழை பெய்யும் போது அதிலிருந்து வரும் நீரானது பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே இருக்கும் பாலத்தின் வழியாக வெளியேறி வந்தது
இந்த நிலையில் இன்று ராம்நகரில் சுமார் 2 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. அதில் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால்தண்ணீர் வெளியேறாமல் தேங்கியிருந்தன.
இதனால் பத்திர பதிவிற்கு உள்ளே சென்றவர்கள் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருசக்கர வாகனங்களையும் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் தண்ணீர் வெளியேறினால் மட்டுமே இரு சக்கர வாகனங்களை எடுக்க முடியும். பத்திரப்பதிவு வளாகத்துக்குள் சுமார் 200 ஆண்டுகள்பழமை வாய்ந்த ஆல மரம் சாய்ந்தது அலுவலகத்திற்கு மேலே விழுந்தது.
இதில் அலுவலகத்தில் பயன்படுத்தக்கூடிய ஜெனரேட்டர் மேல் விழுந்ததால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தேவகோட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதை அப்புறம் படுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை