கொரோனா: சென்னை பாதிப்பு விவர பட்டியல்! முன்னிலை வகிக்கும் ஏரியா..

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
pattiyal - 2026

கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 59,662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,981 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6000ஐ கடந்துள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000ஐ எட்டியுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான். கோயம்பேடு மார்க்கெட் மூலமாக மட்டுமே 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண்டலவாரியான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதில், ராயபுரத்தில் 490 பேரும் , தண்டையார்பேட்டையில் 207 பேரும் , திரு.வி.க நகரில் 477 பேரும் , அண்ணா நகரில் 233 பேரும் , தேனாம்பேட்டையில் 343 பேரும் , கோடம்பாக்கத்தில் 546 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் மொத்தமாக 3043 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.