சோயா வறுவல்.
தேவையான பொருட்கள்
சோயா உருண்டைகள் – அரை கப்
குடைமிளகாய் – அரை கப் (சிறியதாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ – கால் தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
செய்முறை
சோயா உருண்டைகளை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற விடவும்.
தண்ணீரை மாற்றி வேறு தண்ணீர் ஊற்றி உருண்டைகளை பிழிந்து எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். குடைமிளகாயையும் சிறிதாக நறுக்கவும்.
நறுக்கி வைத்துள்ள சோயா உருண்டைகளில் உப்பு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், அஜினோமோட்டோ சேர்த்து பிசறி 10 நிமிடங்கள் ஊற விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து ஊறிய சோயாவை போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுக்கவும்.
அதனுடன் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து அதில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை வறுக்கவும். சோயா குடைமிளகாய் வறுவல் சுவைக்க தயார்.