திண்டுக்கல் அரசு பள்ளியில் கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல், நாகல் நகர் சந்தை ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் உள்ள கழிவறைகளை தண்ணீர் ஊற்றி துடைப்பத்தை கொண்டு சீருடையில் மாணவிகள் சுத்தம் செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு மாணவ, மாணவிகளை பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் கல்வி கற்க வரும் மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய உத்தரவிட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி இதுபோன்ற செயலில் ஈடுபடுத்தக்கூடாது என என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..