நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஏராமான படங்களில் நடித்துள்ளார் விஷ்ணு விஷால்.
கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான, ராட்சசன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான விருதுகளை குவித்தது அப்படம்.
விஷ்ணு விஷால் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார். அவர் நடித்து தயாரிக்கும் எஃப்ஐஆர் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளை சேர்ந்த 4 பிரபலங்கள் டீசரை வெளியிட்டனர். இந்த டீசரும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் தான் காதலித்து திருமணம் செய்த தனது மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்தார். ஒரு மகன் உள்ள நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சட்டப்படி விவாகரத்து செய்தார். இதனை நடிகர் விஷ்ணு விஷாலே தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
விஷ்ணு விஷாலின் பிறந்த நாளுக்கு கூட ஜூவாலா கட்டா அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ஜூவாலா கட்டாவை திருமணம் செய்யவே நடிகர் விஷ்ணு விஷால் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்ததாக தகவல் வெளியானது.
ஆனால் அதுகுறித்து இருவருமே வாய் திறக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த காதலர் தினத்தை விஷ்ணு விஷாலும் ஜூவாலா கட்டாவும் கொண்டாடியுள்ளனர். அப்போது ஜூவாலா கட்டா விஷ்ணு விஷாலை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.
முத்தம் கொடுக்கும் அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் ஜூவாலா கட்டா. மேலும் மை வேலன்டைன் என்றும் அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை நடிகர் விஷ்ணு விஷால் லைக் செய்துள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுவரை இருவரின் காதல் குறித்தும் அரசல் புரசலாக தகவல் பரவி வந்தது. ஆனால் இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில் காதலர் தினமான நேற்று இருவரும் தங்களின் காதலை வெளிப்படையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
My valentine ❤️@TheVishnuVishal pic.twitter.com/fjHpSDHJn6
— Gutta Jwala (@Guttajwala) February 14, 2020