நடிகை விஜயகுமாரின் மகள் வனிதா ஏற்கனவே 2 கணவர்களை விவாகரத்து செய்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சமீபத்தில் பீட்டர் பாலின் குடிப்பழக்கம் காரணமாக அவரை பிரிந்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், பீட்டர் பாலுடன் வனிதா சமரசம் பேச சென்றதாகவும், பீட்டர் பால் அவரை நிராகரித்துவிட்டதாகவும் செய்திகள் பரவியது.

இதை மறுத்துள்ள வனிதா விஜயகுமார் ‘ நான் யாருடனும் சமசரசம் செய்ய செல்லவும் இல்லை. என்னை யாரும் நிராகரிக்கவும் இல்லை. இதுவரை நான் தான் மற்றவர்களை நிராகரித்துள்ளேன். எனவே, இதுபோன்ற செய்திகள் நம்ப வேண்டாம். என் முந்தையை உறவுகளில் பொறுமையின் எல்லையின் சென்றே விலகியிருக்கிறேன். பொய்யான வாழ்க்கையை வாழ முடியாது. உங்கள் கற்பனைகளை குறைத்துக்கொள்ளுங்கள். என் வலியை என் வழியில் நான் சமாளித்துக்கொள்கிறேன். தற்போது எனது வேலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தே கவனம் செலுத்தி வருகிறேன். பீட்டருன் சட்ட ரீதியாகவோ, உணர்ச்சிப்பூர்வமாகவோ எந்த தொடர்பும் இல்லை’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
To all my well wishers and media friends..some baseless rumors are being circulated as news claiming me trying to patch up and get back and I being rejected.kindly refrain from hallucinating such illusions as I have never been rejected in my life by anyone. It would have been me
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 4, 2020



