
சென்னை: மறைமுக வரியில் ஜிஎஸ்டியால் தமிழக பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் தமிழக நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் மறைமுக வரியில் ஜிஎஸ்டியால் தமிழக பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும், மாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணிகளால் வரி வருவாய் அதிகரிக்கும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரூ.14,977 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை ரூ. 23,176 ஆக குறைவு.
2018-19 இல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு.
மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.786 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தனது பட்ஜெட் உரையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.



