சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ரவினாய்குமார்-துளசி தம்பதியினர். இவர்களுக்கு ஆர்த்தி என்ற 19 வயது நிரம்பிய மகள் உள்ளார். ஆர்த்தியின் தந்தை சில நாட்களுக்கு முன்பு இறந்து போகவே தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
ஆர்த்தி தற்போது நாமக்கலில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆர்த்திக்கும், அசோக் என்பவருக்கும் இடையே காதல் ஏற்ப்பட்டுள்ளது.
மேலும் நேற்று முன்தினம் காதலி ஆர்த்தி பிறந்த நாள் என்பதால் அதனை காதலர் தினமான நேற்று சிறப்பிக்காலாம் என நினைத்துள்ளார் அசோக். அதனால் தனது காதலி ஆர்த்தியை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஒரு பைக்கில் மோதி இருவரும் தூக்கி எரிய பட்டுள்ளனர்.
அதில் ஆர்த்தி சாலையின் நடுவே விழவே பின்னால் வந்த லாரியின் டயரில் சிக்கி காதலன் அசோக் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.