12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2 ஆம் தேதி பொதுத்தேர்வுகள் தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.16 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வு எழுதி வரும் நிலையில், சிறைவாசிகளும் தேர்வெழுதி வருகின்றனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 3,012 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் ஏப்ரல் 24 வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
மேலும், தேர்வுகளின் முறைகேடுகளைக் கண்காணிக்க பிரத்தியேக கட்டுப்பாட்டு அறையும், செல்போன் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.