October 18, 2021, 12:20 pm
More

  ARTICLE - SECTIONS

  ஆன்டி-இண்டியன் என தன்னைத்தான் எச்.ராஜா சொல்வதாக எண்ணி ஆத்திரத்தில் டிவி.,யை உடைத்த கமல்!

  kamal torch2 - 1

  சென்னை: தன்னைப் பார்த்துதான் ஆன்டி-இண்டியன் என பாஜக., தேசியத் தலைவர் ஹெச்.ராஜா சொல்வதாக குற்றமுள்ள நெஞ்சத்தினராய் குறுகுறுத்த கமல்ஹாசன், ஆத்திரத்தில் டிவி.,யைப் போட்டு டார்ச் லைட்டை வீசி எறிந்து உடைத்துப் போட்டார்.

  இப்படி ஒரு காட்சியை அவர் வீடியோ பதிவாக அவரே வெளியிட்டுள்ளார்.

  மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தனது டிவிட்டர் பதிவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

  தனித்து நின்று களம் காண்பதால், கண்ணை மூடிக் கொண்டு எல்லோரையும் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்க்கிறார் கமல்ஹாசன். மக்களவைத் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

  இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் டிவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

  kamal torch - 2

  இந்த வீடியோவின் தொடக்கத்தில் டிவி.,யில் பேசும் திமுக தலைவர் ஸ்டாலின், நான் கருணாநிதியின் மகன் என்கிறார். உடனே கமல் முகம் கோணலாகி கோபமாகி சிவக்கிறது. பின் ஹிந்தியில் ஒருவர் பேச்சு.. தொடர்ந்து தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் .. என்று எடப்பாடியார் பேச்சு…இவற்றை கோபமாகக் கேட்கும் கமல், கடைசியாக, ஹெச்.ராஜாவின் குரலில் ”நான் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது.. நீங்கள் ஆன்டி இந்தியன்” எனச் சொன்னதும் அது ஏதோ தன்னைத்தான் சரியாகச் சொல்கிறாரோ என்ற அச்சத்திலும் ஆவேசத்திலும் கோபமாகி, உச்சந்தலை பிடரி பின்ன கோபம் தலைக்கேறி கையில் வைத்திருக்கும் டார்ச் லைட்டை வீசி எறிந்து, அந்த டிவியை போட்டு உடைத்துவிட்டு அங்கிருந்து அதே கோபம் மாறாமல் நகர்ந்து வருகிறார்.

  பின் அவர் கேமராவுக்கு போஸ் கொடுத்தபடி, வாக்காளர்களைப் பார்த்து பேசுகிறார்…..முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போட போறீங்க.
  குடும்ப அரசியல்ன்னு சொல்லி நாட்டையே குழி தோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா.
  நம் உரிமை இல்லை நம்மை உரிமைக்காக போராடின போது துரத்தினாங்களே அவங்களுக்கா.
  இல்லை விவசாயிகளை நடுத்தெருவில் நிற்க வைத்தார்களே அவங்களுக்கா,
  இல்லை கார்ப்பரேட் கைக்கூலியா மாறி மக்களை சுட்டுக் கொன்றார்களே அவங்களுக்கா..
  யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள். சொல்லுங்க.. யாருக்கையா ஓட்டு போட போறீங்க..
  ஏப்ரல் 18 குனிஞ்சு கும்பிடாதீங்க.. நிமிர்ந்து ஓட்டு போடுங்க.. மாபெரும் மாற்றத்திற்கு மக்கள் நீதி மய்யம், என்று அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

  ஆனால்… பாவம்… கமல்ஹாசனுக்கு அதே டிவி.,யில், மக்கள் நீதி மய்யத்துக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் யாருக்கும் உதவாத நோட்டாவுக்குப் போடும் ஓட்டுதான் என்று மக்கள் சொல்வது காதில் விழவில்லை! இல்லாவிட்டால்.. மக்களின் மண்டையைக் குறி பார்த்தே அதே டார்ச் லைட்டை ஓங்கி எறிந்து ரத்தம் வரவைத்து காயப் படுத்தி… காலி செய்தாலும் செய்திருப்பார்!

  இதிலும் சினிமாத்தனம்..! இதிலும் போலித் தனம்…! மய்யனாரே தமிழகம் சினிமாக்காரர்களால் பட்ட வேதனையும் துன்பமும் துயரமும் சீரழிவும் வெளங்காத்தனமும் இத்தோடு போதும்…! போய் நீரும் ரஜினிக்குப் போட்டியா இன்னும் நாலு படம் நடியுமய்யா..! என்று பதில் கொடுக்கிறார்கள் சமூகத் தளங்களில்!

  கமல் சொல்வதை நாம் கேட்க வேண்டுமா? அல்லது நாம் சொல்வதை கமல் கேட்கவேண்டுமா!?

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,562FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-