நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரித்த ‘நல்ல’ முஸ்லிமை தாக்கிய ‘பயங்கரவாத’ முஸ்லிம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை

ramanathapuram incident - 2026

ராமநாதபுரத்தில் அதிமுக., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வரவேற்ற அதிமுக., நிர்வாகி மொஹம்மத் காசிம் (42)க்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலக்குடியில், அதிமுக கூட்டணியில் பாஜக., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அவருக்கு அதிமுக., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு இஸ்லாமியர்களும் வரவேற்பு அளித்தனர். உடன் பெண்களும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வாக்கு சேகரித்துவிட்டு பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அங்கிருந்து சென்ற பின்னர், அதிமுக., நிர்வாகியும் அதிமுக கூட்டணியின் திருப்பாலைக்குடி பகுதி தேர்தல் பொறுப்பாளருமான மொஹம்மது காசிம் என்பவரை அதே பகுதியை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த மொஹம்மது யூசுப் என்பவர், தி.மு.க.வினரோடு சேர்ந்து அரிவாளால் அவரது இரு கைகளையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

பலத்த வெட்டுப்பட்ட மொஹம்மது காசிம் மயங்கிய நிலையில் சுருண்டு விழுந்தார். உடனே அவரை கழக நிர்வாகிகள் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதை அடுத்து, பாதிக்கப்பட்ட அதிமுக நிர்வாகியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். எதிர்க் கட்சியினரின் இந்தக் கொலைவெறி தாக்குதல் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பயங்கரவாத தொடர்புடைய இஸ்லாமியர்கள் தொடர்ந்து, பாஜக., வேட்பாளர் மற்றும் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வரும் அதிமுக.,வினரை கற்கல் எறிந்து தாக்குவதும், அரிவாள், கத்தி என பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முயற்சி செய்து மிரட்டுவதும் நடந்து வந்தது. இந்நிலையில், அதிமுக., நிர்வாகியை வெட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அராஜகம் வன்முறைக்குப் பெயர் போனவர்கள் என்று கருதப் படும் திமுக.,வினருடன், கொலைவெறிக்கு பெயர் பெற்றவர்கள் என்று கூறப் படும் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் கைகோத்திருப்பதால், ராமநாதபுரம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அமமுக.,வின் குறிப்பிட்ட சாதிப் பிரிவினரும் இஸ்லாமிய எஸ்டிபிஐ., கட்சியினரும் கூட்டு சேர்ந்து ஒருபுறம் பாஜக., வேட்பாளரை மிரட்டி வருகின்றனர்.

பாஜக., மாவட்டத் தலைவர் கே.முரளீதரன் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது, மாவட்டத்தில் இரண்டாவது தேர்தல் நேர கொலைவெறித் தாக்குதல் சம்பவம் என்றும், அதிமுக., பாஜக., கட்சியினர் அவர்களின் அராஜகங்களை அமைதியுடனும் பொறுமையுடன் எதிர்கொண்டு வருகின்றனர் என்றும், மக்கள் இவர்களின் காட்டுமிராண்டித்தன அராஜகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர், அதற்கான பதிலை அவகள் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தலில் தெரிவிப்பார்கள் என்றும் கூறினார் முரளீதரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.