December 8, 2025, 3:53 AM
22.9 C
Chennai

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்… உண்மைகள்!(பகுதி-26)

vantherikaL vambupracharam - 2025

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

Lemurian Theory –gave India a new Direction – லெமூரியன் கோட்பாட்டு ஆய்வு பாரத வரலாற்றை மாற்றியமைத்தது. – இதுவும் வந்தேறிகளின் சதிகளில் ஒன்று.

பிரித்தாளும் கொள்கையை மிகவும் தந்திரமாக அமல்படுத்தினர் பிரிட்டிஷார். மௌன்ட்பேட்டன் இந்தியாவை துண்டாடுவதே இலட்சியமாகப் பணி புரிந்தார்.

இந்தியாவில் இருந்தவரை அதே வேலையாக சதி செய்தார். அதற்குத் தன் மனைவியின் உதவியைக் கூட பெற்றார்.

மைகேல் என்ற மற்றொரு அதிகாரி “சீக்கியர்கள் ஹிந்துக்கள் அல்லர்!” என்று பிரசாரம் செய்தான். தானும் ஒரு சீக்கியராக மாறி மைகேல் சிங் என்று பெயர் வைத்துக்கொண்டு மேலும் தன் குள்ளநரித் தந்திரத்தை தொடர்ந்தான். மக்கள்தொகை கணக்கில் ஹிந்து-சீக்கியர் என்ற கணக்கீட்டை நீக்கினான். “ஹிந்துமதம் ஒரு மலைப்பாம்பு. அது உங்களை விழுங்கிவிடும்” என்று சீக்கியர்களிடம் பிரசாரம் செய்து நம்பவைத்தான். அதன் தீய பலனை இப்போதும் நம் தேசம் அனுபவிக்கிறது.

இப்படிப்பட்ட சதித் திட்டம் ஒன்றை தமிழ்நாட்டில் நடத்தினர் வந்தேறி கிறிஸ்தவக் கும்பல். அதுதான் ‘லெமூரியன்’ திட்டம்.

lemuria - 2025

இந்த கற்பனைக் கதை பஞ்சதந்திரத்தில் உள்ள பூசாரி, ஆட்டுக்குட்டி கதைபோல மக்களின் மூளையில் பல சந்தேகங்களை விதைத்தது.

லெமூரியா கோட்பாடு என்றால் என்ன?
இது 1864ல் முன்மொழியப்பட்டது. இந்தக் கொள்கையின்படி லேமூரியா என்ற பெரிய கண்டம் ஒன்று இருந்ததாம். அது ஹிந்து மகாசமுத்திரத்தில் ஒரு காலத்தில் இருந்த பெரிய தீவாம்.

அது இன்றைய மடகாஸ்கரில் இருந்து பாரத தேசம், சுமித்ரா வரை பரவி இருந்ததாம். அந்த கற்பனையை செய்த பெரிய மனிதர்கள் இருவர் சதியில் கூட்டாளிகள். ஒருவர் ராபர்ட் கால்டுவெல். மற்றொருவர் பிலிப் லூட்லே ஸ்க்ளாடர் (1829-1913). இவர்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்ததே இந்த தொலைந்துபோன லெமூரிய கண்டம் என்ற கோட்பாடு.

அந்த பெரிய கண்டத்தில் பெரிய பெரிய நகரங்களும் சகல சாஸ்திரங்களையும் படித்தறிந்த மேதாவிகளும் இருந்தார்களாம். பூமத்திய ரேகைக்கு சமீபத்தில் அந்த கண்டம் இருந்ததாம்.

அந்த மகா கண்டம் ஹிந்துமகா சமுத்திரத்தில் மூழ்கியபோது அந்த ஜாதியினர் புலம்பெயர்ந்து பாரத தேசத்தின் தெற்குப் பகுதியில் நிலைபெற்றார்களாம். அவர்களே தமிழர்களாம். புராதன தமிழகம் அல்லது லெமூரியா வாசிகளாம் அவர்கள்.

யூரோபியன் உணர்வுகளுக்கும் கிறிஸ்தவ எண்ணங்களுக்கும் அனுகூலமாக இந்த அசத்தியக் கதையை திறம்பட கட்டமைத்தார்கள். அதற்கு உதவக்கூடியவர்களை உருவாக்கினார்கள்.

திவ்யஞான சமாஜம் உப ஸ்தாபகர் மேடம் ஹெலேனா பெத்ரோவ்னா ப்ளாவட்ஸ்கீ (1831-1891) இந்த லெமூரியன் சித்தந்தாத்தை பிரசாரம் செய்தார்.

பாரத் சிவில் சர்வீசைச் சேர்ந்த சார்லஸ் டிமெக்லீன் இந்த சித்தாந்தத்தை பிரிட்டிஷ் வந்தேறிகளின் அதிகாரப்பூர்வமான ஆவணங்களில் சேர்த்தார். இந்தியர்களை மூக்கின் அளவைப் பொறுத்து பிரிவுபடுத்திய மற்றொரு போலி மேதாவி ரிஸ்லே, “திராவிட கொள்கையின் மூலங்கள் லெமூரியன் கொள்கையில் இருந்து வந்தவை” என்று உறுதிப்படுத்தினார்.

இந்த கற்பனைக் கதையை நியாயப்படுத்தி தமிழில் நூல்கள் வெளிவந்தன. மேலும் கொஞ்சம் கூட்டி கழித்து எழுதி சாமானிய தமிழனின் மனதில் நுழைப்பதற்கு இந்த நூல்கள் பயன்பட்டன.

எம்எஸ் பூர்ணலிங்கம்பிள்ளை எழுதிய A premier of Tamil Literature, டிஆர் சேஷ ஐயங்கார் எழுதிய Dravidian India என்ற இரு நூல்களையும் கிறிஸ்தவ சமூகம் பெரிதும் பயன்படுத்திக் கொண்டது.

தேவநேய பாவாணர் (1902-1981) என்ற இந்திய கிறிஸ்தவ தமிழ் பண்டிதர் இந்த சதிக்கு வினையூக்கம் கொடுக்கும் நூல்களை எழுதினர். கால்டுவெல் செய்த இந்த சதிக்கு அனுகூலமான நூல்களை பாவாணர் எழுதி அளித்தார். 1966ல் எழுதிய ஒரு புத்தகத்தின் முன்னுரையில் பாவாணர், “தமிழ் நன்றாக வளர்ச்சியடைந்த லெமூரியன் மூலத்தைக் கொண்ட மொழி” என்று குறிப்பிடுகிறார். அதோ புலி என்ற உடன் இதோ வால் என்று உரைக்கும் பழமொழி போல.

தமிழ்நாடு மாநில அரசு இந்த பொய்க் கொள்கைகளுக்கு ‘ஆதாரங்களை’ மேற்கோள்காட்டும் ஒரு மியூசியம் கூட ஏற்பாடு செய்தது.

லெமூரியன் கொள்கையின்படி…
*திராவிடர்களும் கறுப்பின ஆப்பிரிகர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.
*சமஸ்கிருத மொழியோடு தமிழுக்கு தொடர்பு இல்லை.
*சிங்கள மொழியும் தமிழ் மொழியும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை.
(1918 குணவர்த்தனா நூல்கள்).

இந்த விஷ விதைகள் வளர்ந்து மகா விருட்சங்களாகி ஸ்ரீலங்காவில் இன வெறுப்புகள் வளரக் காரணமாயின. உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

devaneyapavanar - 2025

பாரத தேசத்தில் இந்த வேற்றுமை வாதம் வளரும்படி சர்வதேச சதிகள் எவ்வாறு செயல் புரிகின்றன என்பதை ராஜீவ் மல்ஹோத்ரா எழுதிய Breaking India என்ற நூல் விவரமாக விளக்குகிறது. தமிழ்நாட்டில் கிறிஸ்தவமும் வந்தேறிகளும் கொண்டுவந்த போலி சிந்தாந்தம் அதன் பின் வந்த மொழிப் போராட்டஙளுக்கும் ராமாயண வெறுப்பு அநியாயங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சி, நாஸ்திக கட்சிகளின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்தது.

சமுதாயத்தைப் பிரிப்பது, ஒரு வர்க்கத்தை மைனாரிடியாகக் காட்டுவது, அவர்களுக்கு வன்முறைகளை கற்றுக் கொடுப்பது, தேசங்களை துண்டாடும்படி தூண்டிவிடுவது… இவையே வந்தேறிகள் செய்த துஷ்பிரசாரங்களின் பின் உள்ள சதித்திட்டம்.

தமிழ்நாடு, நாகாலாந்து, கோவா, மிஜோரம்… என்று எங்கு பார்த்தாலும் இதே நிலைமை! இந்தியர்கள் உண்மையை உணர வேண்டும்!


Source- ருஷிபீடம் மாத இதழ், டிசம்பர், 2018


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories