பாதாம் ரோல்ஸ்
தேவையானவை:
பாதாம் பருப்பு – 20,
இனிப்பு பால் கோவா – 100 கிராம்,
நெய் – சிறிதளவு,
பாதாம் எசன்ஸ், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
பொட்டுக்கடலை (பொடிக்கவும்) – ஒரு டீஸ்பூன்
கலர் கொப்பரைத் தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
பாதாம் பருப்பை சுடுநீரில் அரை மணி நேரம் ஊறவிட்டு, தோல் உரிக்கவும். பிறகு, பாதாம் பருப்புகளைத் துடைத்து மிக்ஸியில் பொடிக்கவும். பாத்திரத்தில் பால் கோவா, பொட்டுக்கடலைப் பொடி, பாதாம் பருப்பு பொடி, ஏலக்காய்த்தூள், பாதாம் எசன்ஸ் சேர்த்து நன்கு உதிர்த்து கட்டியில்லாமல் பிசையவும்.
கையில் நெய் தடவிக்கொண்டு மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, உருளை (சிலிண்டர்) வடிவில் உருட்டி, கலர் கொப்பரைத் துருவலில் புரட்டி எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: இதை இரண்டு நாள்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.