சேமியா ஃப்ரூட் சாலட்
தேவையானவை:
வேக வைத்த சேமியா – 4 டேபிள்ஸ்பூன்,
வாழைப்பழம் – ஒன்று,
மாதுளை முத்துக்கள் – கால் கப்,
கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை (கலந்தது) – 2 டேபிள்ஸ்பூன், பப்பாளி துண்டுகள் – ஒரு டீஸ்பூன்,
ஆப்பிள் (நறுக்கியது), – ஒன்று
வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு கப்,
தேன் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பழங்கள் அனைத்தையும் போடவும். வேக வைத்த சேமியாவை அவற்றுடன் சேர்த்து நன்கு கலந்து, வெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து மீண்டும் சீராகக் கலக்கவும். அதன் மீது தேன் விட்டு, ஃபிரிட்ஜில் வைத்து ‘ஜில்’ என்று பரிமாறவும்.