அப்படி போடு சக்கை போடு! ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்! பட்டைய கிளப்பும் ஜெகன்!

Published:

jagan - 2026

ஆந்திரத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு பல அதிரடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஆந்திரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. வருகிற மார்ச்ச் 5ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் உள்ளாட்சி அமைப்புகளில் சில மாற்றங்களை செய்யவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில தகவல் தொடர்புத்துறை அமைச்சர் நானி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலின்போது யாரேனும் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். தேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் தற்போது 3 முதல் 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Related articles

Recent articles

spot_img