
ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கிறிஸ்துவ நம்பிக்கையை இளையராஜாவிடம் எதிர்பார்ப்பது ஏன் என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர் சமூக ஊடகங்களில்!
ஒரு கிறிஸ்துவர் இப்படி எழுதியிருக்கிறார்…
இயேசு உயிர்த்தெழுந்தார் என்று நாம் நம்புகிறோம் ,, ஏனென்றால் நாம் கிறிஸ்தவர்கள், ஆனால் இளையராஜாவும் நம்பி அப்படி சொல்ல என்ன இருக்கின்றது..
இயேசு உயிர்த்தெழுந்தார் என நம்புவது கிறிஸ்தவர் மட்டுமே.
உண்மையில் கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சியினை கண்டவர் யாருமில்லை, பெரிய ஆராய்ச்சியாளர்களும் இல்லை என்றே சொல்லுகின்றனர் ,, அவர் உயிர்த்தெழுந்து பகிரங்கமாக மக்கள் முன் வரவுமில்லை, ஆனால் தன் சீடர்களுக்கு அதன் பின் காட்சி கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது ,, அவர் மாய வாழ்க்கைதான் வாழ்ந்தார்
ஆனால் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதுதான் கிறிஸ்தவ நம்பிக்கை, அடிப்படை விசுவாசம் கூட . அதை நம்பினால் அவன் தான் கிறிஸ்தவன்,, நம்பாதவன் கிறிஸ்துவின் இல்லை
நான் கூட அதனை நம்பும் கிறிஸ்தவன், கிறிஸ்து உயிரோடு எழும்பினார் என நம்புகின்றேன், இல்லாவிட்டால் சிலுவையில் கொல்லபட்ட யூத இளைஞனின் மார்க்கம் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது
ஆனால் மற்றவர்கள் ஏன் நம்ப வேண்டும் ?
இயேசு உயிர்த்தெழுந்தார் என்றால் அது கிறிஸ்தவ நம்பிக்கை, இளையராஜா நம்ப என்ன அவசியம் இருக்கின்றது ?
இயேசு உயிர்த்தெழுந்தார் என்று யூதனும், நம்பவில்லை, இஸ்லாமியனும் நம்பவில்லை , இந்துவும் நம்பவில்லை அதைத்தான் இளையராஜாவும் சொன்னார்
இதற்கு வம்பாம் வழக்காம், எவனோ அறிவு கெட்ட கிறிஸ்தவன் புகார் எல்லாம் கொடுத்திருக்கின்றானாம்.
அவனை பிடித்து பைபிளால் அடித்து கொல்ல வேண்டும், நீ ஏற்ற அல்லது நீ நம்பிய விஷயத்தை இளையராஜாவும் நம்ப என்ன கட்டாயமும் அவசியம் இருக்கின்றது??
இஸ்ரேல் யூதர் இயேசுவினை மறுதலிக்கின்றனர், இஸ்லாமியர் அவர் சிலுவையில் அறையபட்டதையே மறுக்கின்றனர்.
அவர்கள் மேல் எந்த கிறிஸ்தவ பயலாவது வம்பும் வழக்கும் தொடர்ந்தார்களா? மாறாக இஸ்ரேலுக்காக பிரார்த்திக்கின்றார்கள்.
ஆனால் இளையராஜா சொன்னால் தவறாம்.
இளையராஜா தமிழர் இசையின் அடையாளம், அவர் மேல் புகார் கொடுத்த பதர்களை, அறிவிலிகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.
உலகம் முழுக்க சொன்னதை இளையராஜாவும் சொன்னார், ஒரு வேளை வழக்கு வந்தாலும் யூதரும், இஸ்லாமியரும் சொன்னதையே நானும் சொன்னேன் என இளையராஜா பதிலளித்தால் இவர்கள் முகம் எங்கே செல்லும்?
அவர் கிறிஸ்து உயிர்த்ததில் நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்வார், இதிலென்ன தவறு?
இந்த பதர்களை எல்லாம் ஓட விட்டு அடிக்க வேண்டும்.
கிறிஸ்து உயிர்க்கவில்லை என இளையராஜா சொன்னாரா? என கோபம் வரத்தான் செய்யும்,, ஆனால் ஆழ நோக்கினால் அவர் பக்கமும் உண்மை இருப்பது புரியும்
அவர் இந்த உலகத்தின் பலரை போல நம்பவில்லை, அதனால் அவர் உயிர்த்தார் என சொல்ல அவசியமுமில்லை
கிறிஸ்தவ அடிப்படை விசுவாசத்தினை அவரிடம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? நிச்சயம் தவறு
தமிழகத்து இசை ஞானிக்கு என்றும் நாம் பாதுகாப்பகவே இருப்போம். அவரை வம்புக்கு இழுத்தவர்களை கிறிஸ்தவனாக சாடுகின்றோம்
நாம் கிறிஸ்தவர்கள், நாம் நம்புகின்றோம் ஆனால் இளையராஜாவும் நம்பி அப்படி சொல்ல என்ன இருக்கின்றது
இளையராஜா என்ன? எச்.ரசா தமிழிசை என எல்லோரும் கூடத்தான் சொல்வார்கள்
ஏதோ இவர்கள் இந்துக்களின் அனைத்து கடவுளையும் நம்புபவர்கள் போல இந்துக்கள் மட்டும் இவர்களை நம்பாமல் மறுப்பது போல பேசிகொண்டிருக்கின்றார்கள்
இந்து தெய்வங்களை நாங்கள் நம்புகின்றோம் என சொல்லிவிட்டல்லவா இளையராஜாவினை சாட வேண்டும்?
அதனை செய்தார்களா?
ஏன் நீங்கள் செய்யும் தப்பை நீங்கள் ஏன் உணர மறுக்கிறீர்கள் ,,
***
இந்து கடவுளை சாத்தான் என்று கூற நீங்கள் யார் ?
திக காரன் இந்துக்களை பேசும் போது மட்டும் உங்களுக்கு இனிக்கிறதே ஏன் ? அதற்கு எந்த கிறிஸ்துவராவது ஒரு கண்டனம் கொடுத்தது உண்டா ?
நாம் இந்து கடவுளை நம்ப மறுக்கிறோம் , அவர்கள் ஏன் நம் கடவுளை நம்ப வேண்டும் ,,
இந்துக்களை நம் கோவிலுக்கு கூட்டிட்டு போகும் போது மட்டும் சந்தோசம் அடையும் நாம், அவர்கள் கோவிலுக்கு போனதுண்டா ?
கிறிஸ்மஸ் விழாவிற்கு நாம் கொடுக்கும் பலகாரங்களை அவர்கள் சாப்பிட வேண்டும்… ஆனால் அவர்கள் சும்மா பலகாரம் கொடுத்து விடடால் நாம் சாப்பிடுவது கிடையாது அப்போம் யாருக்கு இருக்கிறது மத வெறி
இவர்கள் அவர்கள் மதத்தை அதன் தெய்வ கதைகளை நம்பமாட்டார்களாம், ஆனால் மற்றவர்கள் மட்டும் இவர்களின் பைபிளை நம்பி நடக்க வேண்டுமாம்
என்ன பைத்தியகாரதனமான எதிர்பார்ப்பு இது? கொஞ்சமேனும் அறிவோ? , சிந்தனையோ? வெட்கமோ இல்லயா உங்களுக்கு..
கருத்து: Stanley Rajan kumarkanthasamy



