
மாங்காய் வற்றல் குழம்பு
தேவையானவை:
மாங்காய் வற்றல் – 10, மாங்காய் வற்றல் செய்வதற்கு செய்முறை இந்த லிங்கில் உள்ளது https://dhinasari.com/health/135895-is-mango-available-too-much-do-this.html
காய்ந்த மிளகாய் – 2,
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடுகு – தலா அரை டீஸ்பூன்,
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு… கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்து, தண்ணீர் தெளித்து நைஸான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் புளியைக் கரைத்துவிட்டு, அரைத்த விழுதை சேர்த்துக் கலந்து… மாங்காய் வற்றல், உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கவும்.