chandra babu naidu e1565862389210

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது நந்திகாமா போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவாகி உள்ளது. அவர் லாக்டௌன் நிபந்தனைகளை கடைபிடிக்கவில்லை என்று புகார் வந்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுமார் 2 மாதங்களுக்கு பிறகு ஆந்திரப் பிரதேசத்தில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு பல இடங்களில் லாக்டௌன் நிபந்தனைகளை மீறினார்.

மிகப்பெரிய கான்வாயோடு ஆந்திரப் பிரதேசத்தில் நுழைந்து சந்திரபாபு லாக்டௌன் நிபந்தனைகளுக்கு எதிராக ஜக்கைய்யாபேட்ட, கன்சிகர்ல போன்ற இடங்களில் மக்கள் கூட்டத்திற்கு காரணமானார் என்று வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனால் சந்திரபாபு நாயுடு மீது ஐபிசி செக்சன் 188 கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

பிரத்தியேக அனுமதியோடு மே 25ஆம் தேதி ஏபியில் நுழைந்த சந்திரபாபு, வரும் வழியில் பல இடங்களில் மக்கள் கூட்டம் சேர்த்துள்ளார். பைக் ராலி நடத்தி லாக்டௌன் நிபந்தனைகளை மீறினார் என்று மிகப்பெரும் அளவில் விமர்சனங்கள் வந்தன. சந்திரபாபு மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவாகியுள்ளது.

மறுபுறம் விசாகப்பட்டினம் செல்லப்போவதாக ஆந்திர பிரதேஷ் டிஜிபியிடம் அனுமதி கேட்டிருந்த சந்திரபாபு மகாநாடு முடித்த உடனேயே திரும்ப ஐதராபாத்துக்கு சென்று விட்டது கவனிக்கத்தக்கது. ஆனால் இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சந்திரபாபுவுக்கு விஜயவாடாவில் கிடைத்த வரவேற்பைக் கண்டு பொறாமையால் இவ்வாறு புகார் அளித்துள்ளதாக கூறுகிறார்கள்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending