
சிறுவனின் தலைக்குள் புகுந்த மின்சார விசிறி. இரண்டரை வயது சிறுவன் தன் வீட்டில் விளையாடியபடி வேகமாக ஓடியதால் வீட்டில் இருந்த டேபிள் ஃபேன் பிளேட்கள் அவன் தலைக்குள் புகுந்துவிட்டன.
அப்போது மின்விசிறி வேகமாக சுற்றிக் கொண்டு இருந்ததால் அதிலிருந்த கூர்மையான பிளேடுகள் சிறுவனின் தலைக்குள் புகுந்தன. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் வியாழக்கிழமை நடந்தது.
சிறுவனின் மூளைக்குள் பிளேடு நுழைந்து விட்டதால் அவனை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள் பெற்றோர். மேற்கொண்டு சிகிச்சைக்காக பிளேடு காயத்தோடு கூட சிறுவனோடு 150 கிலோமீட்டர் பயணிக்க வேண்டி வந்தது.
நியூரோ சர்ஜன் டாக்டர் அடுல்குப்தா 45 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்து மூளைக்குள் புகுந்த பிளேடுகளை நீக்கினார். இரண்டிலிருந்து மூன்று இன்ச் வரை மட்டுமே பிளேடு தலைக்குள் புகுந்து இருந்ததால் பெரிய ஆபத்து எதுவும் நிகழவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இதனால் மூளைக்கு எப்படிப்பட்ட ஆபத்தும் நேராது என்றார்கள். ஒருவேளை பிளேடு இன்னும் சில இன்சுக்கள் உள்ளுக்குள் புகுந்து இருந்தால் மிகவும் ஆபத்தாகி இருக்கும் என்றனர்.

தற்போது சிறுவனின் ஆரோக்கியம் நிலையாக இருப்பதாகவும் ஒன்றிரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்வோம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இரண்டரை வயது சிறுவன் காண்ட்வாவில் உள்ள தன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மூடி போடப்படாத பெடஸ்டல் ஃபேன் முழு வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. அவனுடைய பெற்றோர் அவன் தலையில் இருந்து மின்சார விசிறியின் பிளேடுகளை நீக்குவதற்கு முயற்சிக்காமல் மின்சார விசிறியில் இருந்து பிளேடுகளை கட் செய்து அப்படியே டாக்டரிடம் அழைத்துச் சென்றது நல்லதாகப் போயிற்று.
மாவட்ட மருத்துவமனை மருத்துவர்கள் முதலுதவி செய்து இன்டோருக்கு அனுப்பி வைத்தார்கள். நான்கு மணி நேரம் பயணம் செய்து அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு எம்ஐ ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றார்கள். பின் அங்கிருந்து பாம்பே ஹாஸ்பிடலுக்கு அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்கள்.
இந்த சிறுவனை மாலை 6 மணிக்கு எங்களிடம் அழைத்து வந்தபோது தலையில் பிளேடு ஆழமாகச் இருந்தது என்று நியூரோ சர்ஜன் டாக்டர் அடுல்குப்தா தெரிவித்தார். மிகவும் நுணுக்கமான இந்த அறுவை சிகிச்சையை அவர் 45 நிமிடங்கள் செய்ததாக தெரிவித்தார். நல்லவேளை அந்த பையன் நினைவோடு இருக்கிறான். அவன் எங்களிடம் வந்த போது நினைவு தப்பக் கூடிய மூளையில் இருக்கும் பகுதிகளை அந்த பிளேடு டேமேஜ் செய்யவில்லை என்று கூறினார்.
தலையின் ஒரு பக்கத்தில் பிளேடு புகுந்து இருந்ததாகவும் ஆழமாக மூளைக்குள் செல்லவில்லை என்றும் அதனால் பெரிய விபத்து நேரமில்லை என்றும் கூறினார். அதே சமயத்தில் இன்னும் சில இன்சுக்கள் ஆழமாக சென்றிருந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். அறுவை சிகிச்சைக்கு பின் பையன் நன்றாக தேறி வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்வோம் என்றும் டாக்டர் குப்தா தெரிவித்தார். ஆனால் அவனுக்கு வலிப்பு நோய் வரக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.