ஏப்ரல் 22, 2021, 1:28 காலை வியாழக்கிழமை
More

  வாய் துர்நாற்றம் வீசுகிறதா? எளிய குறிப்புகள்!

  Bad breath - 1

  வயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்கு நிச்சயம் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.

  இதனை வாய் துர்நாற்றத்தை ஹளிடோசிஸ் என்று சொல்வார்கள்.

  பொதுவாக இதுபோன்ற பிரச்சினை வரக்காரணம் சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

  பற்களின் இடையில் அல்லது நாவின் பின்புறம் உருவாகும் கிருமிகளே பெரும்பாலும் வாய் துர்நாற்றத்திற்கான முக்கிய காரணிகளாகும்.

  புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

  வாய் துர்நாற்றம் ஏற்பட மருத்துவ ரீதியான காரணங்கள்
  தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் இன்பெக்க்ஷன் ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருக்கும் அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.

  அஜீரணம் சம்பந்தமான கோளாறுகளால் அவதிபடுபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும். சாதரணமாக உணவுக்குழாயில் செல்லும் உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிட வேண்டும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவானது உணவு மண்டலத்திலேயே தங்கினால் வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும். இதை புளித்த ஏப்பம் என்று கூறுவார்கள்.

  வாய் துர்நாற்றத்தை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்களை இங்கு பார்ப்போம்

  ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்கள் போன்றவை நீங்கும்.

  சில துளிகள் பெப்பர் மிண்ட் ஆயிலை எடுத்து ஈறுகளில் தடவினால், ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
  இலவங்கப்பட்டையின் பொடியை சிறதளவு எடுத்துக் கொண்டு அதனை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல செய்து ஈறுகளின் மீது தடவி 2 நிமிடங்கள் கழித்து அதனை கழுவி விட வேண்டும்.

  தினமும் காலையில் பல்துலக்குவதற்கு முன்பாக அரை டீஸ்பூன் அளவு சிசேம் ஆயில், தேங்காய் எண்ணெய், சில துளிகள் டீ ட்ரீ ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 10 நிமிடங்கள் நன்றாக வாய்கொப்பளித்து துப்பி விட வேண்டும்.

  புதினா இலையை காய வைத்து சம அளவு உப்பு சேர்த்து தூளாக்கி காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் குறையும். பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
  வேப்பங்குச்சியில் பல் துலக்கினால் பற்களில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும்.

  வெந்தயக்கீரையை ஒரு கப் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த நீரில் வாய்க்கொப்பளித்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

  அசோக மரப்பட்டையை தூளாக்கி அதனுடன் உப்பு சேர்த்து அந்த தூளைக் கொண்டு பல் துலக்கினால், பல் வலியை குறைக்கலாம்.

  ஆலமரப்பட்டையில் கசாயம் செய்து, அதை கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

  கொய்யா இலையை தூள் செய்து அதனுடன் உப்பு சேர்த்து கலந்து வைத்து, இந்த பொடியை கொண்டு பல் துலக்கினால் வாய் துற்நாற்றம், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

  எலுமிச்சையின் தோலை தூக்கி எறியாமல் அதனை நன்றாக வெயிலில் காய வைத்து தூள் செய்து அதனை கொண்டு பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்று மின்னும்.
  ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள நீரில் சிறிதளவு உப்பை போட்டு ஒரு நாளில் ஒரு சில முறைகள் வாய் கொப்பளித்தால், இந்த ஈறுகளில் இரத்தம் வடிதலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

  வாய் கொப்பளிக்கும் நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
  வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை மென்று வாயில் அடக்கிக் கொள்ளலாம். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படாது.
  அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

  குடல்சார்ந்த பிரச்னைகளால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் சரிசெய்ய காலையில் எழுந்தவுடன் டீ, காப்பிக்கு பதில் 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் வயிறு சுத்தமாவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் நீங்கும்.
  காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கலாம்.

  அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை உண்பதை குறைத்தால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

  உணவு உண்ட பிறகு கேரட், ஆப்பிள் போன்றவற்றைச் சாப்பிட்டால், எச்சில் சுரப்பு அதிகமாகும். இதனால் வாயிலுள்ள பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும். காலையிலிருந்து சாப்பிடாமல் வெறும் வயிற்றிலேயே இருந்தால், வயிற்றில் அமிலச் சுரப்பு உண்டாகும். இதுவும் துர்நாற்றத்துக்குக் காரணமாக அமையும். இதற்கும் பழங்களும், காய்கறிகளும் நல்ல தீர்வு தரும்.

  நாக்கின் சுவை நரம்புகளில் சேர்ந்துள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றுவது துர்நாற்றத்தைப் போக்க உதவும். இதற்குக் கடைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சுத்தப்படுத்தும் கருவியை (Tongue cleaner) வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது பிரெஷ் பயன்படுத்தியும் நாக்கைச் சுத்தம் செய்யலாம்.

  வாய் துர்நாற்றத்தை போக்கி வாயில் நறுமணம் வீச சோம்பு விதைகள் பெரிய உதவியை செய்கின்றன. சோம்பில் இருக்கும் கிருமியை எதிர்த்து போராடும் தன்மை, வாயில் உள்ள கிருமிகளை அழிக்கிறது. ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிட்டவுடன் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மெல்லுவதால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும். அல்லது சோம்பு டீயும் பருகலாம். அதனால் தான் ஹோட்டல்களில் சாப்பிட்டு முடித்தவுடன் சோம்பு கொடுக்கிறார்கள்.

  வெந்தயம் :
  வாயில் உள்ள துர்நாற்றத்தைப் போக்க வெந்தயம் மிகவும் நல்லது. வெந்தயம் சேர்த்து தயார் செய்த டீயை பருகுவதால் வாய் துர்நாற்றம் உடனடியாக கட்டுப்படும். தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து , பின் வடிகட்டி பருகவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

  ஆப்பிள் சிடர் வினிகர் வாய் துர்நாற்றத்தை போக்க மிகச் சிறந்த வீட்டு வைத்திய பொருளாகும். இதில் இருக்கும் சமச்சீரான pH அளவால் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து கொப்பளித்து வருவதால் விரைவில் வாய் துர்நாற்றம் மறையும்.

  பட்டை :
  லவங்க பட்டையில் சின்னமிக் அல்டிஹைடு இருப்பதால் , வாய் துர்நாற்றம் அழிக்கப்படுகிறது. இது வாயில் இருக்கும் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது. ஒரு கிண்ணத்தில் நீரை விட்டு நன்றாக கொதித்ததும் சிறிதளவு லவங்க பட்டை தூளை சேர்க்கவும். இதனுடன் சிறிது பிரிஞ்சி இலை மற்றும் ஏலக்காயைச் சேர்க்கவும். நன்றாக கொதித்தவுடன் அந்த நீரை வடிகட்டி அடிக்கடி வாயை கொப்பளிக்கவும்.

  டீ ட்ரீ எண்ணெய் :
  டீ ட்ரீ எண்ணெயில் இருக்கும் ஆன்டிசெப்டிக் தன்மையால் இது ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. ஒரு கிளாஸ் நீரில் சில துளிகள் டீ ட்ரீ எண்ணெய், புதினா எண்ணெய் மற்றும் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலந்து . அதனை பயன்படுத்தி அடிக்கடி வாய் கொப்பளிக்கலாம்.

  வாய் துர்நாற்றத்தைப் போக்க ஒரு சிறந்த மற்றும் எளிய வீட்டு வைத்தியம் கொத்தமல்லி . கொத்தமல்லி இலையில் இருக்கும் பச்சையம் (க்ளோரோபில்கள்) மிகச் சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு வாய் துர்நாற்றத்தை அகற்றுகிறது. கொத்தமல்லி இலைகளை சிறிதளவு வாயில் போட்டு மெல்லலாம்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »