தனியார் ஊழியர்களுக்கு தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை! ஆணையிட்ட நீதிமன்றம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
court-1
court-1

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரம் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் ஓட்டு போடுவதற்கு மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.

ஆனால் அரசு வேலை செய்பவர் மட்டும் தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை தருகிறது. தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அவ்வாறு எவ்வித சலுகைகளும் இல்லை.

அதனால் சேலத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் அவர் கூறியது,தேர்தல் நாள் அன்று வாக்களிப்பதற்காக தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த தனியார் நிறுவனத்தின் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை நீதி மன்றம் தேர்தல் அன்று தனியார் துறையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் அந்நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் ஆணை பிறபித்துள்ளது.

இந்த செய்தி வெளியானதும் அனைத்து தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டுமின்றி சோஷியல் மீடியாவில் இதுக்குறித்து அதிக படியான மீம்கள் கேளி, கிண்டல் செய்யும் வகையில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.