
கருஞ்சீரகத்தை, ஆங்கிலத்தில் பென்னல் பிளவர் என்று அழைக்கிறோம்.
கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், அது ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது. இதுமட்டுமல்லாது,கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், 17 சதவீத புரதமும், 26 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் மற்றும் 57 சதவீதம் தாவர எண்ணெய்களும் உள்ளன.
கருஞ்சீரகம்… இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜீரகா’,
குஞ்சிகா’, உபகுஞ்சிகா’,
உபகுஞ்சீரகா’ என்றும், ஆங்கிலத்தில் Black cumin’,
Small Fennel’ என்றும், இந்தியில் காலாஜீரா’,
கலோன்ஜி’ என்றும் சொல்வார்கள்.
மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்’ (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. இது, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.
இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன.
சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது.
இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
மிகச் சாதாரணமாகப் பலரையும் பாடாகப்படுத்தி வரும் மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும்.
ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம்.
தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம்.
இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும். தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து. கரப்பான், சொரியாசிஸ் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்கலாம். இதனால் நோயின் தீவிரம் குறையும்; அதனால் ஏற்பட்ட புண்களும் தழும்புகளும் மறையும். குளியல் பொடிகளில் இதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
மாதவிடாய்க் கோளாறுகளின்போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிடலாம்.
இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்; வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும்.
பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்.
குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதேபோல் வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்துப் பொடியாக்க வேண்டும்.
இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டதும் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும்; தேவையற்ற கொழுப்பு நீங்கும்; ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும்.
வயிற்று கோளாறுகள் கருஞ்சீரகம் வயிற்றிலுள்ள வாயுத்தொல்லைகளை நீக்கும் திறன் கொண்டது. வயிற்றில் ஏற்படும் உப்புசம் மற்றும் இதர ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குவதோடு மட்டுமில்லாமல் இரைப்பை மற்றும் ஈரலில் ஏற்படும் கிருமி தொற்றுகளையும் போக்கும் தன்மை கொண்டது.
சிறுநீரக கற்கள் கருஞ்சீரகத்தை பொடி செய்துகொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, அதனுடன் சிறிது தேனும் கலக்கி பருகி வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைத்து, அந்த உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி கருஞ்சீரகத்தில் இருக்கும் இயற்கை ரசாயனம் சிறந்த நோய்யெதிர்ப்பு திறன் கொண்டதாக இருக்கிறது. மேலும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் கெட்டக்கொழுப்புகளை கரைத்து உடல்நலத்தை பாதுகாக்கிறது.
- சிறுநீரக கற்கள் கருஞ்சீரகத்தை பொடி செய்துகொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, அதனுடன் சிறிது தேனும் கலக்கி பருகி வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைத்து, அந்த உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தி கருஞ்சீரகத்தில் இருக்கும் இயற்கை ரசாயனம் சிறந்த நோய்யெதிர்ப்பு திறன் கொண்டதாக இருக்கிறது. மேலும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் கெட்டக்கொழுப்புகளை கரைத்து உடல்நலத்தை பாதுகாக்கிறது. சுவாச நோய்கள் ஆஸ்துமா மற்றும் இருமல் சம்பந்தமான நோயால் அவதியுறுபவர்கள் கருஞ்சீரகத்தை பொடி செய்து, அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தேன் மற்றும் அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.
புற்று நோய் தடுப்பு கருஞ்சீரக பொடியை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தேனுடன் குழைத்து சாப்பிட்டு வர புற்று நோய்கள் ஏற்படாமல் காக்கும். எலும்புகளுக்குள் இருக்கும் மஜ்ஜைகளை பலப்படுத்தி உடல் பலத்தை பெருக்கும்.
பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்
தலை முடி உதிர்வதை தடுக்கலாம் கருஞ்சீரக எண்ணெயை தேங்காய் எண்ணெயோடு குறைந்த தீயில் காய்ச்சி அதை ஆறவைத்து, வாரம் 3 நாட்கள் இந்த எண்ணெயை தலையில் அரைமணி நேரம் ஊறவிட்டு தலைக்கு குளித்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.
கருஞ்சீரகத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், அது நம் நினைவுத்திறனை அதிகரிக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் இதனை தினசரி உண்டுவந்தால், மூளையின் செயல்பாடு சிறந்த விதத்தில் இருக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைவுக்கு இது சரியான தீர்வாக அமையும். கருஞ்சீரகத்தை, புதினா இலைகள் சேர்த்து பயன்படுத்தி வந்தால், அது அல்சைமர் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வாக அமையும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டைப் 2 நீரிழிவு நோயாளிகள், கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால், அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் நல்ல பலனைப்பெற, பிளாக் டீ உடன் கருஞ்சீரகத்தை சேர்த்து உண்பதால் நல்ல பலனை பெறலாம்.
கருஞ்சீரக விதைகள், இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. இரத்தத்தில், கெட்ட கொழுப்புகளின் அளவை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. கருஞ்சீரகத்தை, பாலில் கலந்து குடித்தால், நல்ல பலனை பெறலாம்.
கருஞ்சீரக விதைகளில், ஆன்டி – இன்பிளமேட்டரி பண்புகள் உள்ளதால், உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது. கருஞ்சீரக எண்ணெயை, கை, கால் மூட்டுகளில் தடவுவதன் மூலம், நல்ல பலனை பெறலாம். உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க, கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்துமாறு, ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
கருஞ்சீரக எண்ணெய், நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு மட்டுமல்லாது, ரத்த அழுத்த மாறுபாடு ஏற்படாவண்ணம் பாதுகாக்கிறது. உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், வெதுவெதுப்பான நீரில், கருஞ்சீரக எண்ணெயை கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கருஞ்சீரகம், பற்கள் மட்டுமல்லாது,ஒட்டுமொத்த வாய் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஈறுகளில் ரத்தப்போக்கு உள்ளிட்டவைகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது. பல் வலிக்கு உடனடி தீர்வாக கருஞ்சீரகம் விளங்குகிறது. வாய் சம்பந்தமான பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு, அரை தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெயை, ஒரு கப் தயிரில் கலந்து அதை தினமும் இரண்டு முறை, ஈறுகளில் தேய்த்து வர பற்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.
நல்ல பளபளப்பான சருமத்திற்கு, கருஞ்சீரக எண்ணெயை, எலுமிச்சை சாற்றில் கலந்து முகத்தில் தடவி வர வேண்டும்.
கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள், முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு மட்டுமல்லாது, முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.
கருஞ்சீரக எண்ணெயை, முன்தலையில் சிறிது தடவிவர, கடுமையான தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மலச்சிக்கலுக்கு குணம் அளிக்கிறது
மூல நோய்க்கு தீர்வு அளிக்கிறது
உடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கிறது. வயிற்றுப்புண்ணை குணப்படுத்துகிறது.
வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் இதை தனித்தனியாக சுத்தம் செய்து, ஒரு வாணலியில் இட்டு கருகாமல் வறுத்து தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு ஸ்பூன் அளவுக்கு, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இதை சாப்பிட்ட பின், எந்த உணவும் உட்கொள்ளக் கூடாது.
தினமும் இப்படி செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும், மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேறி விடும். இதனால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
பாலூட்டும் தாய்மார் கருஞ்சீரகம் உண்பதால் பால் சுரப்பைக் கூட்டும்.
• சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
பொடுகு, வறட்சி, கிருமித் தொற்று , பலவீனமான முடிக்கற்றைகள் போன்ற பலப்பிரச்சனைகளையும் சரி செய்யும் குணங்கள் கருஞ்சீரகத்தில் உள்ளது.
கருஞ்சீரக எண்ணெயை நேரடியாக உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி இல்லாத சமயத்தில் கருஞ்சீரகத்தை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்த தீயில் எண்ணெயின் நிறம் முழுவதும் மாறும் வரை சுமார் 20-30 நிமிடம் வைத்து இறக்கவும். ஆறியபின் வடிகட்டி அந்த எண்ணெயை கருஞ்சீரக என்ணெயாக பயன்படுத்தலாம்.
கருஞ்சீரக எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சம அளவு எடுத்து கலந்து லேசாக சூடுபடுத்தி ஸ்கால்ப்பில் அழுத்தி மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். இவ்வாறு வாரம் 3 நாட்கள் செய்தால் முடி உதிர்தல் குறைந்து அடர்த்தி பெருகும்.
இரவில் புதிதான எலுமிச்சை சாறை எடுத்து அதனுடன் கருஞ்சீரக எண்ணெய் கலந்து தலையில் தேயுங்கள். மசாஜ் செய்து பி இரவு முழுதும் அப்படியே வைத்து மறு நாள் குளிகவும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் பகலில் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளிக்கவும். வாரம் இருமுறை செய்தால் பொடுகு மாயமாய் மறைந்துவிடும்.
உபயோகிக்கும் முறை-3 : கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து தலையில் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு ஒரு டர்க்கி துண்டை சூடான நீரில் நனைத்து பிழிந்து தலைமுடி முழுவதும் படும்படி கட்டவும். அரை மனி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
கருஞ்சீரக எண்ணெயை ஆணுறுப்பில் தடவி வந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து நீண்ட நேர விறைப்பு தன்மைக்கு உதவியாக இருக்கும்.
கருஞ்சீரகம் யார் யார் சாப்பிட கூடாது
திருமணமான பெண்கள் அதாவது குழந்தைக்காக திட்டமிட்டுள்ளவர்கள் கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது ஏனென்றால் இது கரு உண்டாவதை தடுக்கும் என்பதால் இதை தவிர்ப்பது நல்லது.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது. அதிக இரத்த அழுத்தம் இருந்தால் அதை கட்டுக்குள் கொண்டு வரும் தன்மை கருஞ்சீரகத்திற்கு இருந்தாலும் குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் அது இன்னும் குறைந்து ஆபத்தாக மாறிவிடலாம்.
சக்கரையின் அளவு குறைவாக இருப்பவர்களும் தவிர்ப்பது நல்லது ஏனென்றால் இது சக்கரையின் அளவை மேலும் குறைத்து ஆபத்தாக மாறி விடலாம்.
கருத் தரித்திருக்கும் கர்பிணி பெண்கள் கருஞ்சீரகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் இது கருவை கலைக்கும் தன்மை கொண்டது.