கடந்த அரசு உதவியது போல… இப்பவும் உதவுங்க..! ஸ்டாலினுக்கு பார்வையற்றோர் கோரிக்கை!

Published:

avaniyapuram blind - 2026

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் தமிழக அரசு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு பார்வையற்றவர்கள் சுமார் 80-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த கொரோனா காலத்தில் தமிழக அரசு நிதி உதவி வழங்கியது போல், தற்போது நிதி உதவி வழங்க கோரி , முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால் உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்கள் பேருந்துகள், ரயில் நிலையங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் வியாபாரம் செய்து பிழைத்து வந்தனர். தற்போது, கொரோனா 2-வது அலை காலம் என்பதால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடும் சூழ்நிலையில் உள்ளதால் தங்களது வாழ்வாதாரம் இல்லாததால், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என்று முதல்வருக்கு மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img