அ முதல் னௌ வரை.. அப்பாச்சி தீர்வு!

Published:

health tips 1
health tips 1

இருமல் குணமாக…

பசும்பாலில் மஞ்சள் பொடியையும் சிறிது மிளகுப் பொடியையும் போட்டுக் காய்ச்சி நன்றாக கொதி வந்ததும் இறக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுங்கள். இரண்டு மூன்று வேளைகளிலேயே இருமல் சரியாகி விடும்.

இலுப்பைப் பூவைக் கஷாயம் வைத்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். இந்தக் கஷாயத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவும் நிவர்த்தியாகும். ஓர் அவுன்ஸ் கஷாயத்தை 200 மி.லி. பசும்பாலேர்டு சேர்த்துச் சாப்பிட்டு வரும்பொழுது விசேஷ பலனைக் கொடுக்கும்.

வறட்டு இருமலுக்கு 200 மி.லி. தண்ணீரில் ஓர் அவுன்ஸ் துளசிச் சாற்றைக் கலந்து போதுமான கற்கண்டையும் அதில் போட்டு நன்றாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு தினமும் 3 வேளை 3 அவுன்ஸ் அளவு இதைச் சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.

கற்கண்டுடன் சீரக்த்தை சேர்த்து வாயில் போட்டு நற நறவென்று மென்று சாப்பிட இருமல் நின்று விடும்.

வறட்டு இருமலுக்கு உப்பையும் மிளகையும் பொடி செய்து காய்ச்சிய தேனில் கலந்து உள்ளுக்கு சாப்பிட்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பால் பருக குணமாகும்.

எலுமிச்சம் பழரசம். தேன். கிளிசரின் சமபாகம் கலந்து மூன்று வேளை
ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட இருமல் குணமாகும்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

இரத்த மூலத்திற்கு…

இரத்த மூலத்திற்கு பிரண்டை கை கண்ட மருந்து. பிரண்டையை நறுக்கி நெய் விட்டு வதக்கி அரைத்து கோலி குண்டளவு காலை மாலை சாப்பிட்டு வர குணம் தெரியும்.

மூலக்கடுப்பு குணமாக மாதுளம் பூச்சாற்றில் அதிமதுரத்தை அரைத்து சுண்டைக்காயளவு பாலில் சாப்பிட்டு வரலாம்.

மூலம். பௌத்திர நோய் ஏற்பட்டால் குப்பைமேனி சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதன் அளவில் நாலில் ஒரு பங்கு திப்பி வியை வறுத்துச் சூரணம் செய்து சேர்த்து வைத்துக் கொண்டு அரை தேக்கரண்டி அளவு காலையும் மாலையும் பாலுடன் ஒரு மண்டவம் சாப்பிட்டு வர குணமடையும்.

உள் மூலம், இரத்த மூலம் நீங்க முட்காவேளை இலை, துத்தி இலை. பொடுதலங்காய் இம்மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து காலை, மாலை கச்சக்காயளவு எருமைத் தயிரில் சாப்பிட்டு வர குணமாகும். பொடுதலங்காய் கிடைக்காவிடில் அதற்கு பதிலாக பச்சை அருகம்புல் சேர்த்துக் கொள்ளலாம்.

இருதயம் பலமடைய…

திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊற வைத்து கொஞ்ச நேரம் கழித்து அதைப் பிசைந்து வடிகட்டி சிறிது சிறிதாக அருந்திவர இருதயம் பலப்படும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

சுத்தப்பட்டுத் துணியைக் கொளுத்தி அதன் சாம்பலில் ஓர் அரிசி எடை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட இருதயம் பலமடையும். ஒட்டடையை எடுத்தும் கஷாயம் வைத்து சாப்பிடலாம்.

இரத்த பேதிக்கு…

மாதுளம் பழத்தோல். வில்வ இலை, சீரகம் இம்மூன்றையும் சேர்த்துக் கஷாயம் வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவுடன் சர்க்கரை சேர்த்து மூன்று வேளை சாப்பிட இரண்டாம் நாள்களிலேயே இரத்த பேதி நின்று விடும்.

சீதபேதி ஏற்பட்டால் வில்வப் பழ ஓட்டை இடித்துக் கஷாயம் வைத்து தேன் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

இரத்த பேதியிருந்தாலும் இரத்த வாந்தி எடுத்தாலும் நொச்சிப் பூக்களை சேகரித்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகைப் பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து சுவைத்துச் சாப்பிட உடனே குணமாகும்.

நாவல் பழச்சாறு சாப்பிட இரத்த பேதி நிற்கும். நாவற் பழம் சாப்பிட்டாலும் இரத்த பேதி குணமாகும்.

காசுக்கட்டியைத் தூள் செய்து மூன்று குன்றிமணி முதல் 20 குன்றிமணி எடை வரை (நோய்க்குத் தக்கபடி) நெய் அல்லது வெண்ணெயில் உள்ளுக்குக் கொடுக்க குணமாகும்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

கீரைத் தண்டைக் காரமின்றி சமைத்துக் கொடுக்க சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.

உலர்ந்த மாதுளம் பூ 10 கிராம். வேலம் பிசின் 10 கிராம். அபின் மூன்று அரிசி எடை இம்மூன்றையும் ஒன்று சேர்த்து வேளைக்கு 6 குன்றிமணி வீதம் சாப்பிட இரத்த பேதி, இரத்த மூலம், இரத்த மூத்திரம் போன்ற பிணிகள் நீங்கும்.

இரத்த பேதிக்கு…

நாகவிங்க மரத்தின் பூக்காத மொட்டுக்களை எடுத்தரைத்து சர்க்கரைப் பாகில் கலந்து உள்ளுக்குக் கொடுத்து வர இரத்த பேதி, சீதபேதி ஆகியவை நீங்கும்.

மாம்பூவை நிழலில் உலர்த்தி கஷாயம் வைத்து காலை, மாலை சாப்பிட்டு வர நாள் பட்ட சீதபேதியும் குணமாகும்.

Related articles

Recent articles

spot_img