December 6, 2021, 8:25 pm
More

    பட்டைய கிளப்பும்.. பம்ப்கின் கிரேவி!

    Pumpkin Gravy
    Pumpkin Gravy

    பம்ப்கின் கிரேவி
    தேவையானவை:
    வெள்ளைப் பூசணி – கால் கிலோ, கடலைப்பருப்பு – அரை கப்,
    பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
    பெரிய வெங்காயம் – ஒன்று,
    பச்சை மிளகாய் – 2,
    தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் – 2,
    கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
    பூண்டு – 3 பல் (நசுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
    செய்முறை:
    வெள்ளைப் பூசணியை தோல், விதை, நீக்கி பொடியாக நறுக்கவும். கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வேகவைத்த பருப்பை வாணலியில் போட்டு, நறுக்கிய வெங்காயம், பூசணி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு நன்கு வேகவிடவும். இதனுடன் நசுக்கிய பூண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பூசணி கிரேவியில் சேர்த்துக் கலந்து, இறக்கிப் பரிமாறவும்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,106FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,802FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-