சளி, தும்மலுக்கு
ஒரு ஸ்பூன் மிளகை பொடி செய்து மெல்லிய துணியில் முடிந்து காலையில் குளித்தவுடன் உச்சந்தலையில் இரண்டு மூன்று நிமிடம் அழுந்தத் தேய்க்க சளி தும்மல் குணமாகும். சளி ஒழுகுவதும் நிற்கும்.
குளிர் ஜன்னி ஜூரத்துக்கு…
புன்னை பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை சிட்டிகையளவு தெனில் குழைத்து சாப்பிட இரண்டொரு நாட்களில் சுரம் குறைந்து உடல் தேறும்.
முகத்தில் சொறியா?
கண்ட சலூன்களில் சுத்தம் செய்யாத கத்தியால் முகஷவரம் செய்து கொண்டால் முகத்தில் சலூன் சொறி ஏற்படுவதுண்டு. ஒரு வெற்றிலையை நன்கரைத்து எலுமிச்சம் பழச்சாறு கலந்து சொறியின் மீது தடவி வர சில நாள்களில் குணமாகும்.
காதில் ஈ, எறும்பு புகுந்து விட்டதா?
கால் அவுன்ஸ் தண்ணீரில் அரை அவுன்ஸ் உப்பு போட்டுக் கரைத்து சில துளிகள் காதில் விட ஈ. எறும்பு வெளியே வந்து விடும். வரா விட்டால் காதை சாய்க்க தண்ணீரோடு அவை செத்து வந்து விழும்.
லாகிரி வஸ்துக்கள் அளவுக்கு மிஞ்சினால்
அகத்திப் பூவை கறி செய்து சாப்பிட அதனால் உண்டாகும் தீ குணத்தைப் போக்கும். வெப்பத்தினால் ஏற்படும் பித்தத்தை நீக்கும்