சென்னை மெட்ரோ நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மேலாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் வருகின்ற ஜனவரி 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சென்னை நகரத்தின் பொதுப்போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றும் திட்டமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இத்திட்டத்தின் படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்பு வழிகளில் தனியே இயக்கப்பட்டுவருகின்றன.
சென்னை மெட்ரோ நிறுவனத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது 9 பணியிடங்கள் காலியாக உள்ள அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
AGM (Rolling Stock) பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடம் – 1
கல்வித்தகுதி – B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) படித்திருப்பதோ 17 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.
JGM (Rolling Stock) பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடம் – 1
கல்வித் தகுதி : B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) படித்திருக்க வேண்டும். அதோடு 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,00,000
DGM (Rolling Stock) பணிக்கானத் தகுதிகள்
காலிப்பணியிடம் – 1
கல்வித் தகுதி – B.E / B. Tech (Electrical/Electronics/Mechanical) மற்றும் 13 ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றிருப்பது அவசியமான ஒன்று.
வயது வரமபு – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 90,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
JGM (Design) பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடம் – 1
கல்வித் தகுதி : B.E / B.Tech (Civil) மற்றும் 15 ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,00,000
DGM (Civil Maintenance) பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடம் -1
கல்வித் தகுதி : B.E / B.Tech (Civil) மற்றும் 13 ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 90,000
இதேப்போன்று Manager (Civil Maintenance)- 2, Manager (Rolling Stock), DM/ AM (Rolling Stock) போன்ற பணியிடங்களும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-16-2021-Website-Final-1.pdf என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து அஞ்சல் வழியாக வருகின்ற ஜனவரி 7 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
JOINT GENERAL MANAGER (HR),
CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT,
ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU,
CHENNAI – 600 107.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 300 மற்றும் SC/ST பிரிவினருக்கு ரூ. 50.
தேர்வு முறை: சென்னை மெட்ரோ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோவில் பணிபுரிய வேண்டும் என்று ஆசையில் உள்ளவர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.