வயிறு உப்புசத்துக்கு…
மிளகு. ஓமம் தலா 2 கி எடுத்து உடைத்து. ஒரு பொடி நுணா யிலையை வதக்கி கஷாயம் வைத்து சுண்டியதும் வடிகட்டி ஒரு அவுன்ஸ் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர வயிறு உப்புசம் சரியாகும்.
அரைக்கரப்பான் குணமாக…
கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள் வகைக்கு 1 கிராம் எடுத்துப் பொடித்து தேங்காய்ப்பாவில் ஊற வைத்து அடுப்பிலேற்றி நீர் சுண்டக் காய்ச்சி எண்ணெய் பதம் வந்ததும் இறக்கி ஆற வைத்து அரைக்கரப்பான் மீது தடவி வர புண் சீக்கிரத்தில் ஆறும்.
இரத்தத்தில் உள்ள நச்சு நீர்கள் வெளியேற…
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் வாதநாராயணன் என்னும் கீரையை வடிசாறு செய்து பருகி வர ஒரு முறை பேதியாகும் இரத்தத்தில் கலந்த நச்சு வெளியேறும்.
மணல் வாரி அம்மைக்கு…
குடிப்பதற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். கண்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது. வேப்பிலையை அதிமதுரத்துடன் சேர்த் தரைத்து தினமும் மூன்று வேளை கொடுத்து வர மணல் வாரி அம்மை குணமாகும்.
இளநீர், நுங்கு சாப்பிட குடலிலுள்ள சிறு புண்களைக் குணப்படுத்தும்
தோலின் தடிப்புத் தன்மை மாற…
செம்பருத்தியின் இலைகளைப் பறித்து உலர்த்தித் தூள் செய்து. காப்பி. பொடிக்கு பதிலாக பயன்படுத்த நீண்டகால மலச்சிக்கல் நீங்கும் தோலின் தடிப்புத் தன்மை வறட்சி நீங்கும்.