உலகின் மிகப்பெரிய தாயக வேளாண் அமைப்புகளுள் ஒன்றான இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 641 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (Indian Council of Agricultural Research – ICAR), இந்தியாவின் தலைநகரமான, புது தில்லியில் இயங்கி வருகிறது. இது மத்திய வேளாண் அமைச்சகத்தின் வேளாண் ஆய்வு மற்றும் கல்வித்துறையின் கீழ் இயங்கிவருகிறது.
இக்குழுமத்தில் வேளாண்மையில் ஒருங்கிணைந்த, வழிநடத்தல் மற்றும் மேலாண் ஆய்வு மற்றும் கல்விப் பணிகளில் தலைச்சிறந்து இயங்கிவருவதுடன், தோட்டக்கலை, மீன்வளம் மற்றும் விலங்கியல் ஆகியவற்றை நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் அமைப்பாகச் செயல்படுகிறது. இந்த அமைப்பின் கீழ் 90க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 45 விவசாயப் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகிறது.
தற்போது, இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 641 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : Indian Agricultural Research Institute
வேலையின் பெயர் : Technician
விளம்பர எண் : 1-1/2022 Rectt Cell/ Technician
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை : 641 காலிப்பணி இடங்கள்
வயது விவரம் : 18-30 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை : Written Examination மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி : Matriculation or Equivalent (10th)
சம்பள விவரம் : ரூ.21, 700/- சம்பளம்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 18.12.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.01.2022
விண்ணப்ப முறை : Online
விண்ணப்ப கட்டணம்
GEN/OBC/EWSs : ரூ.1000/-
SC/ST/PwBDs/ExSM : ரூ.300/-
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் பார்க்கவும்
https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/74856/Instruction.html